தேவனிடம் அணுகுதல் Phoenix, Arizona, USA 55-0123A 1யாவும் கைகூடிடும், நம்பிடுவேன்..... நாம் ஜெபிப்போமா, பிதாவே, உம்முடைய குமாரரான இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, நீர் அளித்த நன்மைகளான ஆசீர்வாதங்கள், ஆரோக்கியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், மற்றும் இந்த மதிய வேளையில் உம்முடைய குமாரரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒன்று சேர்ந்த சிலாக்கியத்திற்காக உமக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பிதாவே எங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவ அப்பத்தைப் பிட்டுத்தாரும், பரிசுத்தஆவியானவர் தாமே வந்து, வேதத்தின் வார்த்தையான, தேவனின் சொந்த வார்த்தையை, எங்களுக்குத் தேவையாய் இருப்பதை எங்கள் ஒவ்வொரு இருதயத்திற்கும் கொடுப்பாராக. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென். நன்றி, நீங்கள் அமரலாம். 2மதிய வணக்கம், நண்பர்களே. இந்த மதிய வேளையில் இன்றைக்கு இருப்பதில் ஒரு சிலாக்கியமாக கருதுகிறேன், இப்பொழுது கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது, ஆனால் இந்த முறை என்னுடைய தவறல்ல, அது பணி செய்பவர்களுடையது, நான் வாக்கு அளித்தபடி 2:30 மணிக்கு இங்கு இருந்தேன். ஆனால் அவர்கள்தான் இந்த முறை தாமதம் செய்தார்கள். அது எனக்கு ஒரு வகையான நல்ல உணர்வைத் தந்தது, உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் நானே எப்போதும் தாமதமாக வருகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். “எங்கு போனீர்கள், அங்கு போவதற்கு என்ன அவ்வளவு அவசரம்? என்பார்கள்”. ஆனால் இப்போது, இந்த முறை அவர்கள்தான் தாமதம் ஆனார்கள், இப்போது அது சரியாகப் பின்னிட்டு வந்துள்ளது. சகோதரர். உட் இங்கு இருக்கிறாரா, என்னால் அவரை எங்கேயும் காண முடியவில்லை, ஆனால் சகோ. உட் இங்கு இருப்பாரானால், பில்லி உங்களை பின்பாக காண விரும்புகிறான், சகோ. உட், என்னால் அவரை இங்கு காண முடியவில்லை. இங்கு பதிவு செய்கிற இடம் இருப்பதினால்... என்னால் அவரை காணமுடியவில்லை, அவருடைய மனைவியுடன் அவர் இருப்பாரானால், அங்கே, ஆனால் என்னால்... அவர் இங்கே இருப்பாரானால், எங்கேயாவது, சகோ. உட், சகோ. பேங்க்ஸ் உட், நம்முடைய புத்தக விற்பனையாளர்கள், புத்தகத்தை ஏற்றுவதற்கு மற்றும் விநியோகிப்பு செய்வதற்காகவும் மற்ற காரியங்களுக்காகவும் உடனடியாக விருப்பப்பட்டு தயாராக இருப்பதற்காக. பில்லி பால் சபைக்கு பின்னாக உங்களைக் காண விரும்புகிறான். 3இப்பொழுது, நான் நினைத்தேன், ஒரு வேளை ஒருசிறிது காலதாமதத்தை நாம் கொண்டிராமல் இருந்து இருப்போம் என்றால், நான் ஒரு பொருளை இந்த மதிய வேளையில் பெற்றுக் கொண்டிருப்பேன். “மெல்கிசேதேக்கின் பிரதான ஆசாரியன்”. ஆனால் நமக்கு அதிகமான நேரம் இப்பொழுது இல்லாமல் இருப்பதால் நாற்பது நிமிடத்திற்கு மேலாக, அது நீளமாக இருக்கும் என்று நான் யூகித்தேன், அதனால் நாம் வேறொரு பொருளுக்கு மாற்ற வேண்டியதாயிற்று. அதனால் நாம் வேறொரு வேதவாக்கியத்தை படிப்பதற்கு முயற்சி செய்யலாம். இன்றிரவு... இந்த விதமாக சீக்கிரமாக ஓடி ஒரு கூட்டம் முடியும் வரை இப்பொழுது ஒரு இடத்திலிருந்து தாவி மற்றும் ஜெப வரிசையை அணுகுமாறு எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் அது அவர் இன்றிரவு மிகச் சிறந்த தெய்வீக சுகமளித்தலை ஊற்றும்படியாக; அது நாம் ஒருபோதும் சிக்காகோவில் கண்டிராத அளவுக்கு நான் விரும்புகிறேன். மேலும், ஜெபிக்கிறேன் மேலும் தேவனை நம்புகிறேன். ஏனெனில் இதுதான் அந்த கூட்டம் என்பதற்காக அல்ல, ஆனால் அங்கே ஒரு தேவை இருக்கிற காரணத்தினால் தான். 4மேலும் நான் கடிதங்களைப் பெற்றுக்கொண்டேன். மேலும் அவர்கள் மிகவும் பதறலுடன் இருக்கிறார்கள். தொலைபேசியானது எல்லா இடத்திலிருந்தும் வருகிறது. பில்லி கூறுகிறான் அவனுடைய அறையில் உள்ள தொலைபேசியானது, ஒலித்துக்கொண்டே இருக்கிறதாம்‚ அது நகரத்திலிருந்தும் எல்லா இடத்து மக்களிடத்திலிருந்தும் வருகிறது... “இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள், நீங்கள் போகும் அந்த பாதையில் இங்கே ஒரே ஒரு நாளில் இரண்டு மணிநேரம் மட்டும் நின்று; என்று கூறுகிறார்கள்”. அத்தகைய ஒரு மகத்தான தேவை அவர்களுக்கு இருக்கிறது...அவ்விதமான ஊற்றுதலை இந்த இரவு தேவன் இந்த மக்களுக்கு கொடுத்து அபிஷேகிப்பாராக என்று நான் ஜெபிக்கிறேன். அவ்விதமான அபிஷேகத்தைப் பெற்று நீங்கள் உங்கள் சொந்த சமூகத்திற்குச்சென்று, நோயாளிகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஜெபிப்பீர்களாக. அவ்வித மகத்தான தேவையாக அது உள்ளது. இப்போது, முடிந்தவரை விரைவாக வார்த்தைக்குச் செல்வோமாக. சில நொடிகளுக்கு முன்பு நான் காரில் உட்கார்ந்து கொண்டு இருக்கையில், நான் சில தொலைபேசி வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். அங்கே நான் உட்கார்ந்து கொண்டு இருக்கையில், இந்த பொருள் ஒன்று என் நினைவுக்கு வந்தது. வேதாகமத்திலிருந்து அறுபத்தைந்தாம் சங்கீதம் நான்காம் வசனம் வாசிப்பதற்காக தேர்ந்தெடுத்தேன். 5இது ஒரு அழகான துவக்கமாக இருக்கிறது. நான் தாவீதுடையதை நேசிக்கிறேன்... உங்களுக்குத் தெரியுமா, சங்கீதம், பாடல் மட்டும் அல்ல, ஆனால் அவை ஒரு தீர்க்கதரிசனமாகவும் இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்போதாவது சங்கீதம் இருபத்து இரண்டை வாசித்து இருக்கிறீர்களா? இயேசுவானவர் சிலுவையில் இருந்தபோது பேசப்பட்ட அந்த கடைசி வார்த்தை சங்கீதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னுடைய எலும்புகளும் என்னை உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும்”...மேலும் அவருடைய எல்லா நிலைமைகளையும் அந்த இருபத்திரண்டாம் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே ஏதோ கொஞ்சம்...ஏதோ ஒரு வழியில் மறு எதிரொலி கேட்கிறது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை பொறியாளர் சிறிது அதிகமான சத்தத்தை வைத்திருக்கலாம், என்னுடைய சத்தத்தை சரியாகக் கேட்க முடிகிறதா அங்கே பின்னால்? அங்கே மேலே இருக்கிறவர்கள் எல்லாரும் கேட்க முடிகிறதா? என்னை மன்னியுங்கள், நான் ஒரு நாட்டுப்புற பையனாக இருக்கிறேன். நான் பால்கனியில் (Balcony) இருப்பவர்களைக் குறிப்பிட்டேன். மேல்மாடியில்: என்னை கேட்க முடிகிறதா, பின்னாக இருப்பவர்களுக்கு? அங்கே மேலே மாடியில் இருப்பவர்களுக்கு என்னைக் கேட்க முடிகிறதா? அந்த மேல் மாடத்தில் இருப்பவரைப் பற்றிக் கூறுகிறேன், மன்னிக்கவும், நான் ஒரு நாட்டுப்புறத்தான், இதை என் மனைவி கேட்டால், என்னை மேற்கொள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக ஆகிவிடும். சகோதரி உட் நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் இதைப் பற்றி கூறாதீர்கள். பாருங்கள்? ஹா - ஹா - ஹா. 6எல்லாம் சரியே, நம்முடைய எண்ணத்தின் பிண்ணனிக்காக, சங்கீதம் 65: 4-ஆம் வசனத்தை வாசிப்போம். இப்போது இது இப்படியாக வாசிக்கப்படுகிறது: “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு, சேர்த்துக்கொள்கிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்”.(குறிப்பு: உம்மண்டையில் அணுகும்படி உம்முடைய பிராகாரங்களில் வாசமாய் இருப்பவர் பாக்கியவான் - என தீர்க்கதரிசி கூறுகிறார் - தமிழாக்கியோன்) இப்போது தேவன் தாமே வாசித்த இந்த வார்த்தையை ஆசீர்வதிப்பாராக, இப்போது சங்கீதக்காரர் கூறுகிறார், உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு, அவரை அணுகுகிறவன் பாக்கியவான், அதாவது தேவன் அவனை தன்னை அணுகும்படி தெரிந்துகொள்ளுகிறார், ஓ, இதில் நம்மால் எவ்வளவாய் கூடும். நேரம் இருந்தால், நம்மால் கூடும் என்றால், பரிசுத்த ஆவிதாமே இந்த வார்த்தையிலிருந்து தோண்டி நமக்கு அருள்வாராக. 7இப்போது கவனிக்கவும். “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்கிறவன் பாக்கியவான், அவர் தாமே (தம்மை அணுகும்படி தெரிந்துக்கொள்ளப்பட்டவன்) உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்”. கவனிக்கவும், தேவனை அணுகுதல், தேவனை அணுகுவதில் ஒரு வழிமுறை இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு இராஜாவை சந்திக்கப் போவீர்களானால்‚ இராஜாவை அணுகுவதற்கான ஒரு வழிமுறை இருக்கிறது. அங்கே அணுகுவதற்கு ஒரு வழி இருக்கிறது... சரி,இன்னும் அதைவிட எளிமையாகக் கூறவேண்டுமானால், ஒரு வாலிபன் இளம்பெண்ணை அணுகுவதற்கு அவளுடன் நெருங்கிப் பழகுவதற்கு அங்கு...ஒரு குறிப்பிட்ட ஒரு அணுகுமுறை இருக்கிறது. நீங்கள் அப்படியே அங்கு போய் கூறமுடியாது, “ஏய் எனக்கு உன்னை சந்திக்க வேண்டும்; கைகுலுக்க வேண்டும்”, என்று. அவள் ஒரு நல்ல சீமாட்டியாக இல்லாத பட்சத்தில், அவள் உங்களுக்கு ஒருசரியான பாடத்தைக் கற்றுத்தருவாள், அது சரியே. அதை அணுகுவதற்கு ஒரு குறிப்பிட்ட வழி இருக்கிறது. நீங்கள் அவளை மரியாதையுடன் அணுகவேண்டும். 8எல்லாவற்றையும் அணுகுவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. தேவனை அணுகுவதற்கும் ஒருவழிமுறை இருக்கிறது. தேவனை அணுகும் முறையை நாம் அறியாமலிருந்தால், நாம் தேவனோடு ஒரு உரையாடலை ஒருபோதும் கொண்டிருக்க முடியாமல் இருக்கலாம், பாருங்கள், நீங்கள் அறிந்திருக்க வேண்டும்... ஒரு நீதிமன்றத்தில்... நீதிபதி தன்னுடைய இருக்கையில் இருக்கும்போது, நீங்கள் அப்படியே நடந்து சென்று, ஏய் நீதிபதியே, உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினால், அந்த ஒழுக்கமற்ற நடத்தைக்காக யாராவது வந்து உங்களை அந்த அறையிலிருந்து வெளியே தள்ளி சிறையில் அடைத்து விடுவார்கள், பாருங்கள்‚ நீதிபதியை அணுகுவதற்கு ஒரு முறை இருக்கிறது. ஒரு மகத்தான, தெய்வீக நீதிபதியான தேவனை அணுகுவதற்கு ஒரு வழிமுறையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சமயம் மனிதன், தேவ தூதர்களைப் போன்று இருந்தபோது, ஒருவேளை, அவன் அவருக்கு முன்பாக அவருடைய பிரசன்னத்தில் வந்தபோது... அந்த மாட்சிமையான, பரலோகத்தின் இராஜாவை, ஒருவேளை அவன் வேறு விதமாக அணுகியிருக்கலாம். ஆனால் பாவம் அந்த உறவைப் பிரித்ததிலிருந்து... இப்போது அந்த உறவு: 9இப்போது, ஒரு மனிதன், ஒரு மகனாக மாறி, அவனுடைய தந்தையை அணுகும்பொழுது, அவன் அப்படியே நடந்து சென்று, “அப்பா நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். அல்லது ஒரு காரியத்திற்காக உங்களைக் காண வந்திருக்கிறேன்”, என்பான். அது அவனுடைய அணுகுமுறை. ஆனால் இப்பொழுது ஒரு அன்னியனுக்கு அங்கே வேறொரு அணுகுமுறை இருக்கிறது, பாருங்கள்‚ பல காரியங்களுக்காக தேவனை அணுகுவதற்கான முறை இருக்கிறது. இப்போது என் தகப்பன் ஜீவிப்பாரானால், ஒரு நிதியுதவிக்காக நான் அவரிடம் அணுகவேண்டும் என்றால், அதற்கு வேறு விதமான அணுகுமுறை இருக்கிறது. எவ்வளவாய் அவரை நான் நினைத்தேன் என்று அவரிடம் சொல்லவேண்டும். மேலும் அதைப் போன்று தேவனை சந்திப்பதற்கு நீங்கள் இந்த அணுகுமுறையைத்தான் நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும். 10இப்போது மனிதன், ஆதியிலே ஏதேன் தோட்டத்திலே பாவம் செய்தபோது, அவனாகவே தன்னை வேறுபிரித்துக் கொண்டான். மேலும் தன்னுடைய ஜீவ வழியிலே தேவனுடைய எல்லா அணுகுமுறையிலிருந்தும் தன்னை வேறு பிரித்துக் கொண்டான். அவனை உண்டாக்கினவரிடத்திலிருந்து தன்னை வேறு பிரித்துக்கொண்டான், எந்த வழியிலும் அவரைக் காணாதபடிக்கு தன்னை வேறுபிரித்துக் கொண்டான். ஏனென்றால் அவனுடைய பாவத்தினால் அவரை நம்பி இருப்பதிலிருந்து அவனுடைய அவிசுவாசம் அவனை வேறு பிரித்தது. அதுதான் அங்கே இருந்த ஒரே ஒரு பாவம், உன்னுடைய அவிசுவாசத்தின் பாவமாக இருக்கிறது. அவிசுவாசம் தான் உன்னுடைய பாவமாக இருக்கிறது. மேலும் இன்றைக்கு நாம் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இல்லாமல் போனதற்கான ஒரே காரணம் அது நம்முடைய அவிசுவாசத்தினால்தான். அது சபையில் இருக்க வேண்டிய அற்புதங்களும் மற்றும் எல்லா காரியங்களும் அவைகள் இல்லாமல் இருப்பதற்கு அதுதான் காரணம். ஏனெனில் அவிசுவாசம் நம்மை பிரித்து எடுத்து இருக்கிறது. 11மேலும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதன் அவிசுவாசத்தின் காரணத்தினால் பாவம் செய்து கொண்டு மேலும் கொலை, போதை பொருள் உபயோகப்படுத்திக் கொண்டு; இன்றைய நம்முடைய உலகத்தில், மேலும் எல்லா வகையான அழிவுண்டாக்குகிற காரியங்கள் நடக்கிறது; ஏனெனில், தேவனிடத்தில் அவிசுவாசம் கொண்டிருப்பதால்; அதுதான் எல்லாம். நாம் விசுவாசிப்போம் என்றால்... அங்கே இரண்டு காரியங்கள்தான் இருக்கிறது, ஒன்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும் அல்லது விசுவாசிக்காமல் போவது, ஏதாகிலும் ஒன்றுதான். நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால், அதன் பிறகு நீதியின் கிரியைகள் ஒரு விசுவாசியைத் தொடரும், மேலும் நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் நீதியில்லாத கிரியைகள் உங்களைத் தொடரும் ஒரே ஒரு காரியம் அது இதுவாய் இருக்கிறது... பொய் சொல்லுதல், திருடுதல், களவு செய்தல், அதுபோன்றவைகள்... அவிசுவாசத்தின் தன்மைகளாய் இருக்கிறது. மேலும் நீடிய பொறுமை, பொறுமை, நற்குணம், இரக்கங்கள், மேலும் அது போன்றவைகள் தேவனை விசுவாசிப்பதில் இருக்கும் தன்மைகள், தேவனிடத்தில் இருக்கும் விசுவாசம். இப்போது ஆனால் மனிதன் ஏதுவில்லாமல் துண்டித்துக் கொண்டு...அணுகுவதற்கு எந்த வழியும் இல்லாமல்; அவனுடைய ஒரே ஜீவ வழியில் எல்லா காரியங்களும் துண்டிக்கப்பட்டது. அவன் இருளிலே, நம்பிக்கையற்றவனாய் விடப்பட்டுவிட்டான். அவனை உண்டாக்கினவரை ஒருபோதும் அணுகுவதற்கு எந்த வழியும் இல்லாதவனாய் விடப்பட்டுவிட்டான். 12மேலும் அதன் பிறகு தேவன், மனிதனைத் தேடும்படி கீழே இறங்கி வந்தபோது... இதை நீங்கள் கவனிக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அது எப்பொழுதும் தேவனே மனிதனைத் தேடுகிறார், மனிதன் தேவனைத் தேடுவதில்லை. இதை எப்போதாவது அதை நினைத்திருக்கிறீர்களா? எந்த ஒரு மனிதனும், எந்நேரத்திலும், அல்லது எந்த காலத்திலும், தனக்குள்ளாக ஒருபோதும் தேவனை சேவிக்கவேண்டுமென்று விரும்பவில்லை. அவன் இயல்பாகவே அதற்கு எதிராக இருக்கிறான். இப்போது, அவன் தேவனை விசுவாசிக்கிறானென்று புத்திசாலியான எண்ணத்தின் மூலம் அவன் நினைக்கிறான். ஆனால் உண்மையிலேயே, உண்மையாகவே தேவனை விசுவாசித்தால், அவன் மாற்றப்பட்டு, ஒரு புதிய சிருஷ்டியாக தேவனை நம்பினவுடன், மாறுகிறான், அவன் தேவனை அறிவுப் பூர்வமாக விசுவாசிக்கலாம், ஆனால் அவன் தேவனை தம் இருதயத்திலிருந்து விசுவாசித்தால், அப்போது தான் அவன் மாற்றப்பட்டு ஒரு கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினராகிறான். அறிவுப் பூர்வமாக அல்ல தனது இருதயத்திலிருந்து மாற்றப்பட்டிருந்தால் இப்போது... 13ஆனால் மனிதன், தேவனை ஒருபோதும் தேடுகிறதில்லை; தேவன் தான் மனிதனைத் தேடுகிறார். தேவனுடைய தன்மை பரிசுத்தமாகவும் உயர்வாகவும் இருக்கிறது. விழுந்த மனிதன் தவறாகவும், தாழ்ந்தவனாகவும், மதிப்பற்றவனுமாயிருக்கிறான். தேவன் இல்லாத மனிதன்... இதை கூறலாமென்று நினைக்கிறேன் அவன் மனநிலை சரியில்லாதவனாக இருக்கிறான், அது சரியே, அது மிகவும் சரியானதே‚ என்னால் அதை நிரூபிக்கமுடியும். ஒரு மனிதன் தேவனை உடையவனாக இல்லாமல் இருந்தால் அவன் ஒரு காட்டு மிராண்டியாயிருக்கிறான். இப்பொழுது அது கேட்பதற்கு மிக ஆழமாக உள்ளது. ஆனால் அதை என்னால் நிரூபிக்கமுடியும். நாம் இன்றைக்கு நாகரீகமாக இருக்கிறோம் என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம் இயேசு கிறிஸ்து மட்டுமே. மக்கள் கூறுகிறார்கள் இயேசு கிறிஸ்துவின் மதம் உங்களை பைத்தியக்காரர்கள் போல ஓடவைக்கிறது என்று, அவரைக் கண்டுபிடிக்கும்வரை நீங்கள் சரியானவர்களாயில்லை. கண்டுபிடித்தால் அது உங்களுக்கு சரியான மனநிலையைக் கொடுக்கிறது. அது உண்மையே, இப்போது அதாவது, நான் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்காக நான் இதைக் கூறவில்லை சகோதரர்களே, அல்லது கனவான்களே (பாருங்கள்) மற்றும் பெண்களே, நான் அதை செய்ய விரும்பவில்லை. ஆனால் உண்மையிலேயே சரியாக நான் அதை இருக்கிறவிதமாகவே பொருத்த நினைக்கிறேன். 14கிறிஸ்து உங்கள் சிந்தையை இழக்கவிடமாட்டார், நீங்கள் உங்கள் சிந்தையை இழந்திருப்பீர்களானால் அவர் உங்களுக்கு திரும்ப அளிப்பார். அது பிசாசே உங்கள் சிந்தையை எடுத்து அதை தொலைக்கும்படி செய்வான். அது பிசாசு. அந்த கதரேன ஊர் வெறிபிடித்தவனைப் பாருங்கள். அவன் இயேசுவை சந்தித்தபோது, அவனுக்கு அவனுடைய சிந்தையை திரும்ப அளித்தார். அவனுடைய சரியான சிந்தையை. ஒரு மனிதன் சரியான மனநிலையில் இல்லையென்றால், அவன் எவ்வளவு விவேகமுள்ளவனாக இருப்பினும் கிறிஸ்துவை அறியாத மனிதன் புத்தியுள்ளவன் அல்ல; ஒரு காட்டு மனிதனைக் காட்டிலும், ஒரு முரட்டுத்தனத்தை உடையவனே தவிர வேறெதுவுமில்லை. அவனுடைய ஆசைகளுக்கும், மோகங்களுக்கும், ஒரு தாயின் கரத்திலிருக்கும் குழந்தையை எறிந்துவிட்டு, மிருகத்தனமான இச்சையின் காரணமாக அவளைக் கற்பழிப்பான், அதுசரியே. நிச்சயமாகவே, அவன் செய்வான். 15அவன் விஷம் நிறைந்த மதுபானத்தையும், புகையிலையையும் அதைப் போன்றவைகளையும், தன்னுடைய உடலில் புகுத்துவான், அது அவனை விஷமாக்கி அவனைக் கொல்லும், அவன் நினைக்கிறான் அவன் ஒரு படித்த புத்திசாலியான நபர் என்று பாருங்கள். அவனுக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும், அப்போது அந்த பழைய மனிதனுக்கு நீங்கள் ஒரு முட்டாளாக இருப்பீர்கள். ஆனால் தேவனுடைய பார்வைக்கோ ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள். 16இந்த உலகம் இதைப்பற்றி எவ்வளவு கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல‚ அப்போது தான் உங்களுக்கு தெரியவரும், நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்கு வந்தீர்களென்று. ஏனென்றால் உங்களுடைய அழிந்துபோகும் சரீரத்திற்குள்ளாக கிறிஸ்து ஜீவிக்கிறார். அதனால் அது அப்படியாக இருக்கிறது... நீங்கள் ஒரு பன்றியையும் ஆட்டுக்குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆட்டுக்குட்டியானது பன்றியிடம், “ஓ, நான் நிச்சயமாக ஒரு பன்றியைப்போல் இருப்பதை நான் வெறுக்கிறேன். பார், எப்படியாக அந்த சகதியில், சேற்றில், நீ சுற்றித்திரிகிறாய்?” என்று கூறுமானால்... அந்த பன்றிக்கு அந்த குட்டி ஆட்டிடம் திருப்பி பேச முடிந்தால், நீ உன் வேலையை பார்த்துக்கொள், பழமைப் பயலே, பாருங்கள்‚ என் தேவையை நான் அறிவேன். அது உன் வேலையல்ல என்று கூறும். அதற்கு அந்த ஆட்டுக்குட்டியைப்போல் ஆவதற்கு எந்த விருப்பமுமில்லை. ஏனென்றால் அதனுடைய சுபாவமே பன்றிதான். இப்போது அந்த சேற்றை எடுக்கவேண்டுமென்றால், அவனைக் கழுவ வேண்டும் என்பதில்லை, இல்லை, இல்லை, ஆனால் அவனுடைய சுபாவத்தை மாற்ற வேண்டும். அவனுடைய சுபாவத்தை மாற்றினால் நீங்கள் அவனைக் கழுவவேண்டிய அவசியமில்லை, அவனே தன்னைத் தானே கழுவிக்கொள்வான், அதாவது தன் இயல்பை மாற்றுதல். அது சரிதானே? உண்மையே‚ 17எனவே இப்பொழுது மெருகேற்றிக் கொண்டு, சபையை சேர்ந்துக் கொண்டு, நிறைய புத்தகங்களைப் படித்துக்கொண்டு, மற்றும் எல்லா வகைப் புத்தகங்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்துகொள்வதினால், நீங்கள் மனம் மாறிவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை. நீங்கள் ஒரு அறிவு கூர்மையான சிந்தையை பெற்றுக்கொண்டு, அது ஒரு அறிவுப் பூர்வமான சிந்தையை உடையவர்களாய் உங்களைச் செய்து, அது தேவன் ஒருவர் எங்கேயோ இருக்கிறார் என்ற மனநிலையை உடையவறென்றால் இன்றுமாய் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. நீங்கள் கிறிஸ்துவுடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டவர்களாக மாறி அது உங்கள் இருதயத்தையும் சுபாவத்தையும் மாறப்பண்ணும், அதன் பிறகு நீங்கள் தேவனுடைய பிள்ளையாய் மாறுகிறீர்கள், மேலும் பழையகாரியங்கள் கடந்து போனதாய்; எல்லா காரியங்களும் மீண்டும் புதியதாக மாறுகிறது. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களென்றால் தேவன் அதன் பிறகு...அங்கே எந்த ஒரு வழியிலும் மனிதன் அணுகுவதற்கு முடியாது. அதனால் அது தேவனுடைய தயவாகத்தான் அது இருக்க முடியும். அது தேவன் மனிதனை அழைப்பதாகும். “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்”. 18இப்பொழுது, இன்றைக்கு அது அதே காரியமாகத்தான் இருக்கிறது, தேவன் மனிதனை முதலில் அழைக்காவிட்டால் அவன் கிறிஸ்துவிடம் வரமுடியாது. பாருங்கள், அவருடைய சுபாவம், நீங்கள் தேவனிடத்தில் வர வேண்டுமென்ற ஏதோ ஒரு சுபாவத்தையோ, ஏதோ ஒரு எண்ணத்தையோ கொண்டிருப்பவர்களாய் இருந்தீர்களானால் தேவன் உங்களிடம் இடைபட்டாரே‚ அது சரியே. ஏனெனில், “பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் பிதாவிடத்தில் வரமுடியாது அல்லது என்னிடத்தில் வர முடியாது”, என்று இயேசு சொன்னார். அவரைத் தவிர்த்து... கிறிஸ்துவைத் தவிர்த்து நாம் தேவனிடத்தில் வரமுடியாது. அது சரிதானே? பரிசுத்த ஆவியானவர் தான் முதலில் நம்மை அழைக்க வேண்டும் அல்லது அதைக் குறித்து எதையுமே நாம் சிந்திக்கமாட்டோம். அது இப்படியாய் இப்பொழுது இருக்கும்... இப்பொழுது நாம் சரியாக நேராகச் சென்று உலகத்தின் காரியங்களைச் சிந்தித்துக் கொண்டிருப்போம். “நல்லது சபையானது சரியாக இருக்கிறது. நிச்சயமாக, அது சரியென்று நான் விசுவாசிக்கிறேன்”, என்போம். ஆனால் ஒரு நிஜமான ஒரு தொடுதலை, தேவன் தான் செய்ய வேண்டும். 19ஆதாம் தேவனை அணுகுவதற்கு தேவன் உண்டாக்கின இந்த வழியை இப்பொழுது கவனியுங்கள். ஆதாம் அவனாகவே ஒரு அணுகுமுறையை உண்டாக்கினான். அவன் சொன்னான், “இப்பொழுது வெளியே சென்று தான் தேவனைச் சந்தித்தாக வேண்டும்” என்பதற்காக அவனாகவே அத்தி இலைகளால் ஆன ஒரு மேலங்கியை தனக்கு உண்டாக்கி அவனுடைய அவமானத்தை மூடிக்கொண்டான். மேலும் அந்த அணுகுமுறையை தேவன் மறுத்துவிட்டார் என்பதை அவன் கண்டுகொண்டான். மேலும் இன்றைக்கு மனிதன் சிந்திக்கிறான், இப்பொழுது, இங்கே இருக்கும் ஜோன்ஸ் ஒரு விதவைப் பெண்மணி, அவர்களுக்குக் கொஞ்சம் நிலக்கரி தேவையாய் இருக்கிறது. நான் அவர்களுக்கு உதவி செய்யலாம். செஞ்சிலுவை சங்கத்திற்கு என்னுடைய மிகுதியான பணத்தைக் கொடுப்பேன், அல்லது ஏதோ தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பேன். நான் ஒரு சபையில் சேருவேன். நீங்கள் உங்களுக்குள்ளாகவே ஒரு அணுகுமுறையை உண்டாக்கிக் கொண்டு தேவனை அணுகுகிறீர்கள். அதை தேவன் மறுத்துவிடுவார். அங்கே ஒரே ஒரு அணுகுமுறைதான் இருக்கிறது. இப்போது தேவன் ஆதாமின் அணுகுமுறையைத் தள்ளிப்போட்டார். பின்பு தேவன் தாமே சென்று ஆதாமுக்கு அணுகுமுறையை உண்டாக்கினார். அதன்பின் ஆதாம் தாமே அவரை அணுகும்படி செய்தார். அவர் அப்படி செய்ததின் மூலம், அவர் சில செம்மறி ஆடுகளையோ அல்லது எதையோ கொன்று அதன் தோலை அவர்கள் உடுத்துவதற்காகக் கொடுத்தார். அதில் இருந்து வந்த இரத்தத்தின் மூலமாக அவர் இந்த உலகத்திற்கு முதல் அணுகுமுறையைக் கொண்டு வந்தார். பாவத்திற்காக தேவனுக்கு இரத்தம் சிந்துதல் இல்லாமல் அங்கே பாவமன்னிப்பு என்பது இல்லை. அதுசரியே. இரத்தம் ஒன்றுதான் வழியை உண்டாக்க முடியும். 20ஏதேன் தோட்டத்திலே தேவன் ஆதாமுக்காக அங்கே ஒரு அணுகுமுறையை அளித்திருந்தார். அது கபடில்லாத ஒன்றின் இரத்தம் சிந்துதலின் மூலமாக, ஒரு பொருத்தமான அணுகுமுறையுடன் அவரை அணுகும்படியாய் இருந்தது. அதன் பிறகு ஆதாம் இன்னும் ஒருவிசை அந்த செம்மறி ஆட்டுக்குட்டியின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக வந்து அணுகுவதற்கும், மேலும் முகமுகமாய் மீண்டும் தேவனோடு பேசுவதற்கும் அந்த இரத்தத்தின் மூலமாக தேவன் அவனுக்கு அணுகுமுறையை அருளினார். இப்போது மக்களுக்கு அந்த சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக அவரை அணுகுவதே தேவனுடைய முதல் வழியாக இருந்தது. அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை அதுவே வழியாக இருந்து வருகிறது. இரத்தம் சிந்துதலே தேவனை அணுகும்படியாகக் கொண்டு வருகிறது. இப்போது அநேக நேரங்களில், தேவன் அடையாளங்கள் மேலும், சின்னங்கள் மேலும் அதைப் போன்றவற்றைக் கொண்டும் அந்த இரத்தத்திற்குள் வரும்படியாய் ஒரு வழியை உருவாக்குகிறார். இப்பொழுது எடுத்துக்காட்டாக நாம் யோபுவை எடுத்துக்கொள்வோம்.. 21இப்பொழுது யோபு மிக பழைமையான புத்தகமாக வேதாகமத்தில் இருக்கிறது. மேலும் யோபு ஒரு வயதானவனாக இருந்தபோது... மேலும் இப்பொழுது அந்த அழிவானது அவன் வீட்டிற்குள் நடப்பதற்கு முன்பாக அவன் ஒருவகையாய் வருத்தம் கொண்டான். அவன் அனேக பிள்ளைகளை உடையவனாய் இருந்தான், மேலும் அவர்கள் உலகப்பிரகாரமாக இருந்தார்கள். அவர்கள் வெளியே சென்று உலக காரியங்களுடன் கலந்திருந்தார்கள். மேலும் உங்களுடைய பிள்ளைகள் உங்கள் இருதயமானவர்கள் உலகத்துடன் கூட்டு சேர்ந்து அவிசுவாசிகளுடன் வெளியே செல்லத் தொடங்கும்போது, எவ்விதமான ஒரு வருத்தத்தை (உணர்ச்சி உடையவர்களாய்) உடைய பெற்றோர்களாக நாம் எல்லோரும் இருப்போம் என்று அறிந்திருக்கிறீர்கள். நான் சகோதரன் உட்டுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பில்லி அங்கே இருந்தான் என்று எண்ணவில்லை, அவன் எங்கேயோ வெளியே சென்று இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நம்முடைய பட்டணத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தைக் கூட நாம் பெற்றிருக்கவில்லை. மேலும் அங்கே ஒரு கூட்ட உலக பிள்ளைகள், பையன்களும் பெண்களும் கூட இருக்கிறார்கள். மேலும் என்னுடைய மகனை அந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு நான் நினைக்கும்போது, அவன் உண்மையாகவே மனமாற்றம் அடைந்தவனாக மாறி, கிறிஸ்துவிடம் உண்மையாகவே வந்து, அவனுடைய எல்லா இயற்கையான சுபாவம் மாறிபோய், அவன் சீக்கிரமாய் இந்த உலகப்பிரகாரமாகிய கூட்டத்திற்குள் பிடிக்கப்படுவதற்குள், என்னுடைய கரங்களின் கீழாக அவன் முழுமையாக துடைத்து தூய்மையாக்கப்பட வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் அறிந்துகொண்டு நான் அவனுக்குள்ளாக துளையிட்டுவிட்டேன். ஏனெனில் அவனுடைய உண்மையான சுபாவம், அவன் எவ்வளவு நல்ல பையனாக இருந்தாலும் அதுகாரியமில்லை. அது நல்லவனாக... ஒரு ஊழியகார தகப்பனை உடையவனாகவும், ஒரு பக்தி வைராக்கியமுள்ள வீடாகவும், அங்கே எந்த ஒரு உலக காரியபொருட்களை நாங்கள் அனுமதிக்காமல் இருந்தாலும், அது அவனை நல்லவனாக்காது, நாங்கள் தேவனுடைய கிருபையினால் ஜீவிப்பதற்கு முயற்சி செய்கிறோம். கிறிஸ்தவர்கள் எப்படி ஜீவிக்க வேண்டுமோ அதே போல அந்த செல்வாக்கு அவனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. அவன் தொலைந்து போனான் என்றால், ஒரு நீதியான வீட்டின் மேலாக நிச்சயமாகவே நடந்து சென்று, தொலைந்து போவான் என்று எனக்கு தெரியும். மேலும் அவன் என்னுடைய ஜீவியத்தையும், மேலும் வேதாகமத்தையும் மிதித்துக் கொண்டு அவன் நடக்க வேண்டும் அவன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேலாக நடக்க வேண்டியவனாக இருக்கிறான். ஏனெனில் நான் நிச்சயமாகவே தேவனுடைய கிருபையால் அவனுக்கு முன்பாக இதை வைக்கிறேன். 22ஆனால் அவனுடைய சுபாவம் மாறவில்லை என்றால், அதே விதமாகத்தான் (உலகப் பிரகாரமாக) நிச்சயமாக அவன் சென்று கொண்டிருக்கிறான். மேலும் அந்த மேல்நிலை பள்ளியில் பில்லி சேர்ந்த அந்த நாளைக் குறித்து நான் எவ்வளவாய் சிந்தித்தேன். மேலும் எப்படியாய் நினைத்தேன். ஓ, என்னே‚ மேலும் நான் அதை அறிந்திருந்தேன். அதை அவன்... அதை அவன் பெற்றுக்கொண்டான் என்றாலும் ஓ, அவன் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான். நிச்சயமாக, ஆனால் ஒருபோதும் தன்னை முழுமையாய் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடாமல், தன்னை அர்பணித்துக் கொள்ளாமல் இருந்தான். அந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான சுபாவம் அவனுக்குள்ளாக இருந்ததை அறிந்துகொண்டு என்னுடைய இருதயம் அவனுக்காக ஏங்கினது. மேலும் நான் காரிலே வெளியே சென்று மேலும் சுற்றிலும் எங்கும் ஓட்டிச்சென்று, “தேவனே என்னுடைய மகனை அந்த மாதிரியான ஒரு உலக காரியங்கள் அவனைச் சுற்றிகொள்ள விட்டுவிடவேண்டாமென்று நான் ஜெபித்தேன். நான் எப்படியாய் சொன்னேன், ”தேவனே நான் நம்புகிறேன் நான் ஜெபிக்கிறேன்... அவனுடைய தாயார் இறந்தவிட்டாள். மேலும் நான் அவனுக்கு தாயும், தகப்பனுமாய் இருந்து வருகிறேன். அதனால் அவனை அந்த மாதிரியாக உலகக் காரியங்கள் அவனைச் சுற்றிக்கொள்ள விட்டுவிட வேண்டாம். மேலும் தொல்லையில் அகப்பட்டுக்கொள்ள விட வேண்டாம். எப்படியாவது அவனை இப்பொழுது பாதுகாப்பீராக என்று ஜெபித்தேன். 23ஓ, மற்றும் இந்த மதிய வேளையில் எனக்கு நேரம் இருக்குமானால்; எப்படி தேவன், பில்லியின் பாதையில் ஒவ்வொரு நேரத்திலும் சிகப்பு விளக்கை எரியவிட்டார் என்பதைக் கூறுவதற்கு எனக்கு சில மணிநேரம் பிடிக்கும். ஆம் ஐயா அதை நான் பார்த்திருக்கிறேன். இங்கே சில நாட்களுக்கு முன்பாக நான் நியூ ஆல்பனியில் இருந்தேன். நன்றாக பற்கள் வளர்ந்த என்னுடைய சிறிய குழந்தை பள்ளியில் பற்களைக் காயப்படுத்திக்கொண்டாள். அதனால் என்னுடைய மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு பற்களை சரிசெய்வதற்காக மருத்தவமனைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். பில்லி மீன்பிடிக்க சென்றதினால் அவன் மிக மோசமான ஜலதோஷத்தால் அவதிப்பட்டிருந்தான். நான் நியூ ஆல்பனியில் சில ஊழியக்காரரோடு உட்கார்ந்துக்கொண்டு இருக்கையில் ஏதோ ஒன்று, “காரிலிருந்து கீழே இறங்கி நடக்க ஆரம்பி” என்று கூறினது. “அது என்னது என்று நான் நினைத்தேன்”. நான் கீழே இறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தேன். பரிசுத்த ஆவியானவர் அங்கே என்னை சந்தித்துக் கூறினார். “சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பு பில்லி மரணத்தருவாயில் இருக்கிறான். அவன் மீன் பிடிக்க வேண்டும் என்று கூறினான். நான் அவனை, அவனது மிதிவண்டியில் ஏற்றி அவனை அந்த ஆற்றினருகில் விட்டுவிட்டு வந்தேன். நான் நினைக்கிறேன் அவன் மீன் பிடிக்கும்போது தவறி ஆற்றில் விழுந்திருக்கக் கூடும். அதனால் அவனுக்கு ஜலதோஷம் பிடித்தது. அவன் வீட்டிற்கு வருவதற்கு பதில் அவன் சாமிடம் சென்று (அது என்னுடைய மருத்துவ நண்பர்) கூறி இருக்கிறார்கள். நான் இன்றைக்கு நன்றாக நனைந்திருக்கிறேன், எனக்கு ஜலதோஷம் வராதவிதமாய் ஒரு விசை பென்சிலின் மருந்தைக் கொடுங்கள், என்று கூறி இருக்கிறான், மருத்துவரும் அதைக் கொடுத்திருக்கிறார், அவன் திரும்பி வீட்டிற்கு போவதற்குள் அவனுடைய கால் விரல்கள் எல்லாம் பெரிதாக வீங்கிவிட்டது. 24அங்கு என் மாமியார் விரைவாகச் சென்று லூயிவில்லுவிலிருந்த ஒரு மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார். அருகிலேயே ஆம்புலன்ஸ் இருந்ததால் அவனை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது. அவனை மருத்துவமனையில் படுக்க வைத்து இரண்டுமுறை அட்ரினலின்னை அவனுடைய இருதயத்துக்கு வழங்கினார்கள். அவனுடைய இருதயம் பத்திலிருந்து, இருபது வரை அதுபோல் துடித்துக்கொண்டிருந்தது. நான் வீட்டிற்கு மிக விரைவாகச் சென்றேன் என்னுடன் இருந்த ஊழியக்காரர்கள், “உங்களுக்கு பில்லியைப்பற்றி எப்படித் தெரியவந்தது”, என்றனர். “நான் கூறினேன் நீங்கள் காத்திருந்து பாருங்கள்”? நாங்கள் வீட்டின் நுழைவாயினுக்குள் நுழைந்தோம். “பில்லி மருத்துவமனையில் இறக்கும் நிலையில் இருக்கிறான்” என்று அங்கே என் மாமியார் வீட்டின் முற்றத்தில் நின்று அவளுடைய உரத்த குரலில் கத்தி கூறினாள், நான் என்னுடன் இருக்கும் ஊழியக்காரர்களை அங்கே விட்டுவிட்டு, முடிந்தவரை விரைவாக மருத்துவமனைக்குச் சென்றேன். 25இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பில்லியிடம் கூறினேன், நீ ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய், நீ உன் நண்பர்களிடமிருந்து வெளியே வந்துவிடு, நான் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஜெபத்தை முடித்துவிட்டு அந்த அறையில் நிற்கும்போது, கர்த்தராகிய இயேசு நேற்று இரவு எனக்கு இதை வெளிப்படுத்தினார். நான் சொல்வதைக் கேட்காமல், அந்த ஜன்னலின் வெளியே குதித்துவிட்டு, உன்னைத் திருப்பிக்கொண்டு, தலையை நிமிர்த்தி, பாதத்தை உயர்த்தி, போய்க்கொண்டு, போய்க்கொண்டு, அந்த விண்வெளியை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறாய் என்று நான் கூறினேன். நீ அந்த மாதிரியான நண்பர்களை விட்டு விலகவேண்டும் என்றேன். ஆனால், ஒரு குழந்தையாக அதைச் செய்து கொண்டிருந்தான். 26அதன் பிறகு நான் மருத்துவமனைக்கு விரைந்தேன், என்னுடைய சிறிய மருத்துவ நண்பர் வரவேற்பு அறைக்கு வந்து கொண்டிருந்தார், தன்னுடைய தொப்பியை கூடத்தில் வீசிவிட்டுக் கூறினார், “பில், சில நிமிடங்களுக்கு முன்பு, நான் ஏறக்குறைய உமது மகனை கொன்றுவிட்டேன். எங்களிடம் இரண்டு சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறினார்கள், அவனுடைய மார்பில் நாம் அவனுக்கு இரண்டு அட்ரினலின் ஊசிகளைப் போட்டோம். ஆனாலும் அவன் இன்னும் சுய நினைவு இல்லாமல் இருக்கிறான் என்று கூறினர். 27நான் ஒரு தகப்பனாக இருக்க முயற்சி செய்துகொண்டும், வேதாகமத்தின் ஒரு ஊழியக்காரனாகவும், நேராக நின்று மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். டாக்டர், எல்லாம் சரி, “நீங்கள் என்னுடைய நண்பர், நன்மையானதையே செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினேன். அவர், “பில்லிக்கு இந்த மருந்து ஒவ்வாததாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் இந்த மருந்தை முன்பு கூட கொடுத்திருக்கிறேன். அவனுக்கு என்ன ஆனதென்று எனக்குத் தெரியவில்லை, அவனுடைய கையை சுழற்றிக் கொண்டே இருந்தான் என்றார். நாங்கள் இருவரும் ஆத்மார்த்தமான நண்பர்களாக இருக்கிறோம், அதைக் கூறிவிட்டு அவர் வரவேற்பு அறையின் கீழாக நடந்தார், நான், ''நான் அவனை பார்க்க முடியுமா'', மருத்துவரே? என்றேன். அவர், “செல்லுங்கள், அவனுக்குள் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கிறது'' என்றார். 28நான் சுலபமாக உள்ளே சென்று மேலும் அவன் எங்கே இருக்கிறான் என்று கவனித்தேன். எனக்குப் பின்னாக கதவை இழுத்துவிட்டேன். மேலும் அங்கே பில்லி, அவனுடைய முகம் கருமையாகவும் கண்கள் உள்ளே போயிருந்தன. அவனுக்கு அவர்கள் சுவாசக் கருவியை சொருகியிருந்தார்கள், மூக்கின் வழியாக குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அவனுடைய நாக்கு வெளியேயும், வாய் உள்ளாகவும் இழுக்கப்பட்டிருந்தது, கண்கள் அப்படியே எவ்வளவு கருமையாக இருக்க முடியுமோ அவ்வளவாக இருந்தான். அப்போது நான் நினைத்தேன், “அதோ அவன் இருக்கிறான், ”நான் முழங்காலிட்டு, தேவனே என்னுடைய ஒரே ஒரு மகனை எடுத்துக்கொள்வீரோ... தேவனே, அவனை என்னுடைய கரத்தில் எடுத்துக்கொண்டதினால், எடுத்துக்கொள்வீரோ ஆண்டவரே‚ கர்த்தாவே எனக்குத் தெரியும், நீர் குழந்தைகளை அறிந்திருக்கிறீர். அவனுக்கு உதவி செய்வீராக என்று ஜெபிக்கிறேன்'' என்றேன். நான் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்தேன். 29மேலும் சர்வ வல்லமையுடைய தேவன், என்னுடைய நியாயாதிபதி, இங்கே இந்த மதிய வேளையில், அவருடைய பரிசுத்த பலிபீடத்தின் முன்பாக தேவகுமாரனாகிய அவருடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவரை அணுகுகிறேன், என்னுடைய மகனை காப்பாற்றுவதற்காக நீர் மரித்தீர், என்று நான் ஜெபத்தில் இருந்தபோது இங்கே மறுபடியும் அந்த தரிசனம் திரும்பி வந்தது. அவனுடைய கால்களும், மற்றும் தலையும் சுற்றி சுற்றி வந்ததை நான் பார்த்தேன். அவன் அந்த விதமாக சுற்றிக்கொண்டு கீழே, கீழேபோய்க் கொண்டிருந்தான். ஒரு சில இரவுகளுக்கு முன்பாக அந்த தரிசனத்தில் நான் கண்ட விதமாகவே, மேலும் இரண்டு கரங்கள் நீண்டு சென்று அவனைப் பிடித்துத் தாங்கி அந்த விதமாக திருப்பிக்கொண்டு வந்தது. நான் பார்த்த ஒரு சில நிமிடங்களில் பில்லியும் பார்த்தான், மேலும் அவன், “அப்பா நான் எங்கே... எங்கே நான் இருக்கிறேன்? என்று கேட்டான். நான், ''எல்லா காரியங்களும் சரியாகி விட்டது மகனே எல்லா காரியங்களும் சரியாகி விட்டது'' என்றேன். 30நான் திரும்பவும் வெளியே சென்றேன், மருத்துவர் உதவி மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த நபர் போகும் வரைக்கும் காத்துக்கொண்டிருந்தேன். பின்பு, மருத்துவரின் தோளில் கையைப் போட்டு, எல்லாம் முடிந்தது மருத்துவரே என்று கூறினேன், “அவன் பிழைப்பான் என்று நினைக்கிறாயா?”, என்று கூறினார். “கிறிஸ்து...” அதை செய்து முடித்துவிட்டார், என்றேன். ஆமென். அந்த அணுகுமுறையைப் பற்றி பேசினோம். ஆம், யோபு, தன்னுடைய பிள்ளைகள் தற்செயலாக பாவம் செய்திருக்கக் கூடும் என்று நினைத்து இருக்கலாம், அவன், “அவர்கள் பாவம் செய்திருந்து, அதைப் பற்றி எனக்குத் தெரியாமலிருக்கலாம், என்றான். ''எனவே அவன் அணுகுமுறைக்கு ஒருவழியைக் கொண்டிருந்தான். அது தகனபலியின் கீழ் இருந்தது. 31அதனால், தகனபலியை எடுத்து அவனுடைய பிள்ளைகளுக்காக ஒரு பலியை செலுத்தினான். அவன் ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அந்த பலியை செலுத்தினான். அது அப்படியாய் இருக்கலாம் (கவனியுங்கள், பாருங்கள்‚) அவர்கள் பாவம் செய்திருக்கக் கூடும். அவர்கள் யோபுவுக்கு முன்பாக பாவம் செய்யாமல் இருந்திருக்கலாம். அதைப் பற்றி அவன் ஒன்றும் அறியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் உலகத்தில் சென்று தனிமையில் இருந்தபோது பாவம் செய்திருக்கலாம் என்று அறிந்திருந்தான். அருமையாய் அதிகமாக தன்னுடைய பிள்ளைகளுக்கு ஜெபிக்கிற பண்டைய காலத்து அம்மாக்களும், அப்பாக்களும், இன்றைக்கு நமக்கு தேவையாய் இருக்கிறது. அதை மாத்திரம் நாம் பெற்றிருப்போம் என்றால், சிறுவயதில் செய்யும் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும். எனக்கு தெரிந்த மட்டும் முதலில் அவர்களுடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கிற, பண்டைய காலத்து தாய்மார்களையும் தகப்பன்மார்களையும் என்னிடத்தில் கொடுங்கள். 32இந்த மதிய வேளையிலே பையனே, சிறு பெண்னே இங்கே பாருங்கள், அந்த மாதிரியான ஒரு தாயோ அல்லது தகப்பனையோ நீங்கள் பெற்றிருப்பீர்களென்றால், பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்துடன் பேசுகிறார், அது உங்கள் தாயினுடைய ஜெபத்தின் மேலாக நடந்து செல்கிறீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் திரும்பி வந்து நீங்களாக கிறிஸ்துவிடத்தில் சரணடையும் வரைக்கும் செழிப்படையமாட்டீர்கள். அது சரியே. இப்போது, “அவர்கள் பாவம் செய்திருக்கலாம்” என்று யோபு சொன்னான், அதனால் அவன் பெற்று இருந்த மிகச் சிறந்ததை அவன் செலுத்தினான். அதை மாத்திரம் தான் அவன் தெரிந்துகொண்டான். ஏனெனில் அதுதான் அவன் தேவனிடத்தில் கொண்டிருந்த அணுகுமுறை. அதனால் அவனுடைய சொந்த அணுகுமுறைக்கு ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை கொன்றான். அவனுடைய ஒரு பையனுக்காக மற்றொன்றைக் கொன்றான். மேலும் வேறொருவனுக்கு மற்றொன்றைக் கொன்றான். ஒவ்வொருவருக்கும் தேவனை அணுகுவதற்கான ஒரு வழியை, ஒரு தகனபலியாக செய்துகொண்டிருந்தான். தேவன் அந்த உத்தமத்தையும் நேர்மையையும் பார்த்தார். 33“சகோதரன் பிரான்ஹாம் இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். நான் அந்த தகப்பனுடைய செல்வாக்கை நான் விசுவாசிக்கவில்லை...''என்று நீங்கள் சொல்லலாம். நான் அது தனிப்பட்ட ஒருவருடைய காரியம் என்று விசுவாசிக்கிறேன். உண்மை தான்‚ ஆனால் நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவேண்டும் என்ற கட்டளையைப் பெற்றிருக்கிறோம். அது சரியே. மேலும் நமக்கு அன்பானவர்களை தேவனிடத்தில் உரிமை கொள்ளவேண்டும். அப்பொழுது தேவன் அவர்களை இரட்சிப்பார். இப்போது கவனியுங்கள், இவைகளிலெல்லாவற்றிலும், யோபு தன்னுடைய சிந்தையை தேவன் மேல் வைத்திருந்தான். மேலும் அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால் அந்த அணுகுமுறைக்காக பாவ நிவாரணபலியை செலுத்திக் கொண்டிருந்தான்... “நல்லது, புதிய ஏற்பாட்டிலும் அப்படித்தான் இருக்கிறதா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆம் நிச்சயமாக செய்யப்பட்டது. நல்லது, “நான் இரட்சிக்கப்பட, என்னுடைய வீட்டாரும் இரட்சிக்கப்பட வேண்டுமா; என்னுடைய வீட்டைவிட்டு விட்டு வரவேண்டுமா?” என்று அவன் கேட்டான். 34நீ அப்படி செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் அதிலே சரியாக தரித்திருப்பேனாக. பவுல், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று பவுல் பிலிப்பியரின் அந்த சிறை அதிகாரியிடம் சொன்னான். அது சரியே. பரிசுத்தமாக்கப்பட்ட மனைவி தன்னுடைய கணவனை பரிசுத்தமாக்குகிறாள், கிறிஸ்தவனைப் போல ஜீவியுங்கள். ஒரு கிறிஸ்தவனைப் போல இருங்கள். எல்லா நேரத்திலும் ஜெபியுங்கள். தேவன் அங்கே இருக்கிறார் என்றும் மேலும் அவர் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார் என்றும் விசுவாசியுங்கள். அதை அணுகுவதற்கான நிபந்தனைக்குட்பட்டு அதன் ஊடாக அதைச் செலுத்துங்கள். 35அந்த வழியாகத்தான் யோபு அதைச் செய்தான். அவன் ஒரு அணுகுமுறையைப் பெற்றிருந்தான். அது தகனபலியின் மூலமாக இருந்தது. அதனால் அவன் ஒரு தகனபலியை எடுத்துக்கொண்டான். மேலும் வெளியே சென்று அதைச் செலுத்தி தன்னுடைய பிள்ளைகளின் சார்பாக அவன் தேவனை அணுகினான். நீங்கள் அதைப்பார்க்கிறீர்களா? அவன் ஒரு அணுகுமுறையைப் பெற்றிருந்தான். அதனால் அவன் தன்னுடைய பிள்ளைகளின் சார்பாக அந்த அணுகுமுறையை வழக்கமாகக் கொண்டிருந்தான். இப்பொழுது தேவனே, “இங்கே இந்த செம்மறி ஆட்டுக்குட்டியோடு வந்து இதை ஜானுக்காக செலுத்துகிறேன்”. அவன் பாவம் செய்திருப்பான் என்றால், “கர்த்தாவே அவனை மன்னியும் என்று ஜெபிக்கிறேன்”. பாருங்கள், தகனிக்கப்பட்ட அந்த ஆட்டுக் குட்டியின் மூலமாக அணுகுவதற்கு; ஏனென்றால் அணுகுவதற்கு அந்த ஒரு காரியத்தைதான் அவன் பெற்றிருந்தான். 36இப்பொழுது நீங்கள், எப்போதாவது கவனித்தீர்களென்றால் அந்த பேரழிவு யோபுவின் வீட்டை தாக்கியபொழுதும்; மேலும் பிள்ளைகள் எல்லோரும் கொல்லப்பட்ட போதும்; மேலும் யோபு பெற்றிருந்த எல்லா காரியங்களும் அழிக்கப்பட்ட போதும்; தேவன் யோபுவைக் கடிந்துகொள்ளவில்லை; அவர் யோபுவை சுத்தப்படுத்த மாத்திரம் தான் செய்தார். ஆமென். சுத்தப்படுத்துதல் என்கிற அந்த வார்த்தையை நான் நேசிக்கிறேன். கனிகளை உடைய அந்தக் கிளையை அது அதிகமான கனிகளைக் கொடுக்கும்படி தேவன் அதை சுத்தப்படுத்துகிறார். தொல்லை என்னவென்றால் சில நேரங்களில் தேவன் நம்மிடத்தில் கோபமாக இருக்கிறார் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர் நம்மை சுத்தப்படுத்துவதற்காகத் தான் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அது நாம் மிக அதிகமான கனிகளைக் கொடுக்கும்படியாய் அவர் செய்கிறார். நமக்கு ஒரு சில சோதனைகளைக் கொடுக்கிறார். அவைகள் உனக்கு விலையேறப்பெற்ற பொன்னைக் காட்டிலும் அதிக விலை மதிப்புள்ளதாய் இருக்கிறது என்று வேதாகமம் சொல்கிறது. 37நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களானால் தேவனுக்குள் வரும் ஒவ்வொரு மகனும், முதலில் - முதலில் சோதிக்கப்பட்டு சவுக்கடி வாங்க வேண்டும், சிறு பிள்ளையை அடித்துத் திருத்துவதைப்போல் திருத்தப்பட வேண்டும். இது எளிதானது அல்ல, தேவன் உங்களுக்கு அடியைக் கொடுத்தவுடன் இப்படி நீங்கள் கூறலாம், “சரி, இப்போது நான் வெளியே சென்று கொஞ்சம் உலகத்தாருடன் கலந்து கொள்கிறேன், என்று அப்படி செய்தால் தேவன் உங்களுக்கு உண்மையான பழங்காலத்து அடியைக் கொடுப்பார். இயற்கையாகவே அந்தவிதமான அடி இந்நாட்களில் கிடைத்தால், நமக்கு இப்போது ஒரு நல்ல பிள்ளைகளையுடையவர்களாக இருப்போம். தேவன் அவருடைய குடும்பத்தை நேராக்க வேண்டுமென்று இருக்கிறார், தேவன் அவரை அதிகம் நேசிக்கும்படி செய்கிறார். அதனால் கொஞ்சம் அடி கொடுத்து நேராக்குகிறார். என்னுடைய தந்தை என்னை அடிக்கும்போது, அந்த பக்கத்து நிலத்தில் இருக்கும் அந்த நரைத்த தலையையுடைய சகோதரனை என்னுடைய தகப்பனாக ஆக்கிக் கொள்ளலாமென்று, நான் நினைத்தேன். ஆனால் இப்போதோ அவர் கொடுத்த ஒவ்வொரு அடியையும் நான் மதிக்கிறேன். எனக்கு தேவையான அடியை என் தந்தை எனக்கு கொடுக்கவில்லை. ஆனால் அந்த அடி எனக்கு தேவையில்லை என்று இப்போது நினைத்தேன். ஏனென்றால் அது இப்போது என்னை சரியாக்கியது. அவர் தாமே சரியாக இல்லாத போதும் நான் சரியானதைச் செய்யவேண்டும் என்று விரும்பினார். ஆமென். 38நம்மையும் அவர் அப்படி செய்ய வேண்டும். நம்முடைய பூமிக்குரிய பெற்றோர்கள் நாம் சரியானதைச் செய்யவேண்டும் என்று விரும்பினால், கர்த்தராகிய இயேசுவை, நம்முடைய பரலோகப் பெற்றோரைக் குறித்து என்ன? அவர் நம்மை சரிசெய்ய வேண்டும். மேலும், “நாம் சிட்சையை அல்லது அடியை சிறுபிள்ளையின் திருத்துதலை, தாங்க கூடாமல் போனால் நாம் வேசியின் பிள்ளைகளாய் இருப்போம். தேவனுடைய பிள்ளைகளாய் இருக்க மாட்டோம்”, என்று வேதாகமம் சொல்கிறது. பாருங்கள், நீங்கள் உண்மையிலேயே மறுபடியும் பிறந்தவர்களாய் இருந்தால் (இதை பெற்றுக்கொள்ளுங்கள்) நீங்கள் உண்மையிலேயே மறுபடியும் பிறந்தவர்களாய் இருந்தால் அங்கே தேவனிடத்திலிருந்து உங்களை பிரிக்கத்தக்கதான காரியம் ஒன்றுமில்லை. அது சரியே. “பசியோ, கொடுமையோ, சோதனைகளோ, பாடுகளோ, மரணமோ எதுவுமே நம்மை தேவனுடைய அன்பிலிருந்து இயேசு கிறிஸ்துவில் உள்ள அன்பிலிருந்து பிரிக்க முடியாது. நல்லது நான் ஒரு கிறிஸ்தவனாக ஒருமுறை துவங்கினேன். எல்லா காரியங்களும் இந்த வழியாக அந்த வழியாகப் போனது. மேலும் ஓ, என்னே, நான் வேறொரு வழியில் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்“ என்று நான் நினைத்தேன் என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் ஒருபோதும் தேவனிடத்தில் வரவில்லை, சகோதரனே. நீங்கள் உண்மையிலேயே தேவனிடத்தில் வந்து இருந்தால் மேலும் தேவனுடைய பரலோக வரங்களை ருசி பார்த்திருந்தால், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்கு உடையவர்களாய் இருந்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு பாவியாக மறுபடியும் மாற முடியாது. அவிசுவாசியாக ஒரு சோள கதிர் ஒட்டுப்புல் கதிராக மாறினது போல இருக்க முடியாது. அது சரியே. 39அது உங்களுடைய சுபாவம். நீங்களாகவே அதை செய்து விட்டீர்கள். நீங்கள் சரியான அணுகுமுறைக்கு வந்தே ஆக வேண்டும். உங்கள் சொந்த அணுகுமுறைக்கு வரவேண்டும். நீங்கள் தேவனால் உண்டு பண்ணின அணுகு முறைக்கு ஒரு முறை வாருங்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள், ஆம். அங்கே தகனபலி என்ற ஒரே ஒரு நிபந்தனைக்குட்பட்ட அணுகுமுறைதான் இருந்தது என்று யோபு தன்னுடைய பிள்ளைகளை எடுத்துச் சென்று அதன் ஊடாக ஒவ்வொரு... மேலும் ஒரு சிறு காரியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த எல்லா தொல்லைகளும் முடிந்த பிறகு, மேலும் எல்லா காரியங்களும் முடிந்த பிறகு அதன் பிறகு தேவன் அவனுடைய எல்லா ஆடுகளையும் மேலும் அவனுடைய கால்நடைகளையும் மேலும் அவனுடைய குதிரைகளையும் மேலும் பொருட்களையும் அவனுடைய சிட்சையில் அல்லது சுத்திகரிப்பின் முடிவில் தேவன் எல்லாவற்றையும் இரட்டத்தனையாய் ஆக்கினார். அவனுக்கு பத்தாயிரம் கால்நடைகள் இருந்தது என்றால் அவர் அவனுக்கு இருபதாயிரம் கால்நடைகளைக் கொடுத்தார், பாருங்கள். ஓ, என்னே, அது அற்புதமாய் இருக்கிறது அல்லவா? தேவன் யோபுவை ஆசீர்வதிக்கிற நோக்கத்திற்காகவே அவனை சுத்திகரித்தார். 40“சகோதரன் பிரான்ஹாமே, நான் ஒரு கிறிஸ்தவன் மேலும் நான் இப்பொழுது வியாதியுற்றவனாய் இருக்கிறேன். நான் இப்பொழுது அது ஏன் வந்தது என்று ஆச்சரியப்படுகிறேன்” என்று சொல்லலாம். தேவன் உங்களை சுத்திகரிக்கலாம் ஆமென். உங்களுக்கு சில சோதனைகளைக் கொடுத்து அவருக்கு மிக அருகில் வரும்படியாய் செய்கிறார். (அதிகமாக ஜெபிக்கும்படியாய்) அதன்பிறகு உங்களை சுகப்படுத்துகிறார். அது நீங்கள் ஒரு சாட்சியை பெறும்படியாய் செய்கிறார். கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். “நல்லது அவர் மற்றவர்களையும் சுகப்படுத்துகிறார்” என்று நான் கேள்விப்பட்டேன் எனலாம். நீங்கள் ஒரு... கனிகளில் பங்குடைய விவசாயியைப் போல் இருக்கிறீர்கள் இதை பார்க்கிறீர்களா? 41நான் என்னுடையதைப் பெற்றுக்கொள்ளும்போது அதை மிக மோசமாக, கடினமாக நான் நினைத்தேன். அது எனக்கு என்று இருக்கும் என்றால், நான் தோல்வி அடைந்திருப்பேன். ஆனால் நான் அதைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. எனக்குள் இருக்கிற ஒன்றுதான் அதைப் பிடித்துக் கொண்டது. கேள்வி என்னவென்றால், அதை நான் பிடித்துக் கொண்டேனா அல்லது இல்லையா என்பதல்ல‚ அதை அவர் பிடித்து வைத்திருக்கிறாரா அல்லது இல்லையா என்பதே‚ மேலும் அவர் பிடித்திருந்தால் நிச்சயமாக நான் அங்கு வருவேன். கேள்வி என்னவென்றால் என்னால் அதைச் செய்ய முடியுமா அல்லது செய்ய முடியாதா என்பதல்ல அவர் அதைச் செய்தாரா அல்லது இல்லையா என்பதே‚ அவர் அதைச் செய்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதுவே காரியத்தை முடிக்கிறது. ஆமென்‚ 42அது என்னுடைய இருதயத்திலிருந்து வந்தது என்றால் அது என்னவென்றால் நான் தேவனை நம்பியிருக்கிறேன் என்பதே‚ அதன் பிறகு அது... நான் என்ன செய்தேன், என்பதல்ல. அவர் தான் அதை செய்து முடித்தார். நீங்கள் கேட்கலாம், “நல்லது அதன் பிறகு அதைக்குறித்து என்ன... அது உங்களுக்கு பாவம் செய்வதற்கு உரிமை கொடுக்கிறதா? இல்லை, சகோதரனே நிச்சயமாக இல்லை‚ அது என்ன செய்தது? நீங்கள் பாவம் செய்வீர்கள் என்றால், மேலும் வெளியில் சென்று நாம் பாவம் என்று எதை அழைக்கிறோம்? குடிப்பது, மேலும் அப்படியே சென்று கொண்டு, மேலும் தவறான காரியங்களைச் செய்து கொண்டு... அது துவக்கத்திலேயே உங்கள் இருதயம் சரியாக இல்லை என்பதைக் காண்பிக்கிறது. அது இந்த இடத்திலிருந்து வர வேண்டியதாய் இருக்கிறது. அதன் பிறகு நீங்கள் தேவனுடைய வழியில் வரும்போது... அதன் பிறகு கவனியுங்கள்‚ 43முடிவிலே, மேலும் யோபு எல்லா காரியத்தையும் அந்த வழியிலே செய்து முடித்த பிறகு தேவனால் அருளப்பட்ட அணுகுமுறை வழிகளிலே அவனுடைய பிள்ளைகளுக்காகவும், அவனுடைய எல்லா பிள்ளைகளுக்கும் அணுகினான். அவர்கள் சார்பாக ஜெபித்துக் கொண்டிருந்தான். நீங்கள் எப்பொழுதாவது கவனிப்பீர்கள் என்றால் சாலையின் முடிவிலே, யோபுவுக்கு இரட்டத்தனையாக திரும்ப அளிக்கப்பட்டது. அவன் எதைக் கொண்டிருந்தானோ‚ தேவன் அதை இரட்டத்தனையாகத் திரும்ப அளித்தார். அவனைச் சுத்திகரித்தார், மேலும் அவனுக்குத் திரும்ப அளித்தார். 44அவன் பத்தாயிரம் கால்நடைகளைக் கொண்டிருந்தான். அவன் இருபதாயிரமாகப் பெற்றுக்கொண்டான். அவனுக்கு பத்தாயிரம் செம்மறி ஆடுகள் இருந்தன. அவன் இருபதாயிரமாக செம்மறி ஆடுகளைப் பெற்றுக்கொண்டான். அவன் முப்பதாயிரம் வெள்ளாடுகளைக் கொண்டிருப்பான் என்றால், அறுபதாயிரமாக பெற்றுக்கொண்டான். தேவன் அவனுக்கு இரட்டத்தனையாய் ஆக்கினார், அதன் பிறகு மறுபடியும், நான் விசுவாசிக்கிறேன், அவனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். மேலும் அவனுடைய ஏழுபிள்ளைகளையும் தேவன் திரும்பக் கொடுத்தார். நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா? அவர் அவனுடைய பிள்ளைகளை இரட்டிப்பாக்கவில்லை, அவர் இப்பொழுது அவனுடைய பிள்ளைகளை அவனுக்கு திரும்பக் கொடுத்தார். ஆமென். ஏன்? அவன் அதை எப்படி செய்தான்? அணுகுமுறை மூலமாக அது தகனபலியினால். அது சரி, ஆம் ஐயா‚, அவர்கள் எல்லோரும் மகிமையிலே இருக்கிறார்கள். அவர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறந்த பிறகு, தேவன் யோபுவிற்கு பதினான்கு பிள்ளைகள் ஆகும்படி அவர் அவனுக்குப் பிள்ளைகளைத் திரும்ப அளிக்கவில்லை. அவர் அவனுடைய மிருகங்களையும் மற்ற எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்தார். அவர் அவனுக்குத் திரும்ப அருளினார். காரணம் என்ன? அவன் தேவனுடைய அருளப்பட்ட அணுகுமுறையான வழியிலே தகன பலியின் மூலமாக வந்தான். அதுதான் அந்த அணுகுமுறை. 45ஆபிரகாம், அவன் வயது சென்றவனாய் இருந்தபோது, கல்தேயர் என்ற தேசத்திலிருந்து, ஊர் என்னும் பட்டணத்திலிருந்து வந்து சஞ்சரித்தான். தேவன் அவனுடைய மக்களிடத்திலிருந்து அவனை வேறுபிரித்து, அவனுடைய எல்லா கூட்டாளிகளிடமிருந்தும் அவனை வேறு பிரித்தார், அவனுடைய அன்பான நேசமானவர்களிடத்திலிருந்து அவனை வேறுபிரித்து, மேலும் அவனையும் சாராளையும் ஒரு அந்நிய தேசத்தில், அந்நிய மக்களிடத்தில் அனுப்பி அங்கு சில காலம் தங்கியிருக்கும்படி செய்தார். நீங்கள் பரதேசியாக இருப்பதற்காக சந்தோஷம் கொள்கிறீர்களா? 46ஒரு சில காலம் சஞ்சாரியாய், ஒரு புனித யாத்திரீகனாக, ஆமென், ஒரு சஞ்சாரி அது ஒருவர் வெளியே அனுப்பப்பட்டவன். வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ஆபிரகாம் ஒருமிஷனரி ஆக அல்லது ஒரு அப்போஸ்தலனாக இருந்தான். அவன் தேவனால் ஒரு அந்நிய தேசத்துக்கு அனுப்பப்பட்டவனாயிருந்தான். மேலும் அப்போஸ்தலன் என்ற வார்த்தையின் அர்த்தம் “அனுப்பப்பட்ட ஒருவன்” அனுப்பப்பட்டவன் (மிஷனரி) அதேதான். மேலும் இந்த தேசத்தில் அவன் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தான். அதனால் அவன் ஒரு அப்போஸ்தலன், புனித யாத்திரீகன், மேலும் சில காலம் ஒரு சஞ்சாரியாயிருந்தான், மேலும் அதைப்போன்று தான் ஒவ்வொரு விசுவாசியும் இன்றைக்கு தேவனிடத்தில் வருகிறவனாக இருக்கிறான். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தியாக பலியின் மூலமாய் வெளியே அழைக்கப்பட்டு அவன் குடியிருக்கும்படியாய் இருக்கிறான். ஸ்திரீகளான நீங்கள் மேலும் உங்கள் சீட்டு விளையாட்டுகள், இரவு நடனங்கள், உங்கள் போக்கு, உங்கள் குடிபழக்கங்கள். மேலும் மனிதர்களாகிய உங்களுடைய பாவங்களுடன், தேவன் அந்த காரியங்களிலிருந்து உங்களை வேறு பிரிக்கிறார். உங்களை என்னவாக இருக்கும்படியாய் அழைக்கிறார்? ஒரு அப்போஸ்தலனாக. அந்த கூட்டத்திலிருந்து தூரமாக அனுப்பி அல்லது ஜனகூட்டத்திலிருந்து ஒருவித்தியாசமான மக்களாய் இருக்கும்படி செய்கிறார். என்னவாய் இருக்கும்படி செய்கிறார்? இந்த உலகத்திற்கு ஒரு யாத்திரிகனாக, ஒரு அந்நியனாக இருக்கும்படி செய்கிறார். 47ஓ, நான் அந்த பழைய பாடலை நேசிக்கிறேன், நாம் ஞானஸ்நானம் எடுக்கும் போதெல்லாம் அவர்கள் எப்பொழுதும் பாடுவார்கள். நாம் யாத்திரீகர்களும், மேலும் அந்நியர்களாக இங்கே இருக்கிறோம். நாம் ஒரு பட்டணம் வர இருக்கும்படியாய் தேடிக் கொண்டிருக்கிறோம். வெகு சீக்கிரத்தில் அந்த ஜீவ படகு வருகிறது அந்த ரத்தினங்களை வீட்டில் சேர்ப்பதற்கு. ஓ, இப்பொழுது அந்த பழைய பாடலை நான் நேசிக்கிறேன். நாம் அந்த பாடலை பாடிக்கொண்டே போகும்போது நான் ஏறக்குறைய அந்த தண்ணீர் பீச்சி அடிப்பதை என்னால் கேட்க முடிகிறது. நாம் பாடிக்கொண்டிருந்தபோது அந்த விடிவெள்ளி நட்சத்திரம், கர்த்தருடைய தூதனானவர் அவருடைய முதல் தோன்றுதலைச் செய்தபோது; அங்கே நான் நின்று கொண்டிருந்தபோது; பொது மக்கள் நடுவில் முதல்முறையாக என்னுடைய வாழ்க்கையிலே ஸ்பிரிங் தெருவின் முடிவில் ஓஹோயோவின் நதியிலே ஜீன் மாதம் 1933ல் ஒரு வாலிபனாக, பாப்டிஸ் ட்ஊழியக்காரனாக, அங்கே ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்தேன். 48இப்போது, ஆபிரகாம் ஒரு யாத்திரீகனாக, மற்றும் ஒரு அந்நியனாக சிலகாலம் சஞ்சரிக்கும்படியாய் வேறு பிரிக்கப்பட்டு அழைக்கப்பட்டான். எதற்காக? தேவன் இந்த உலகத்திற்கு ஒரு வாக்குத்தத்தத்தைத் தந்து அவன் மூலமாக ஆசீர்வதிக்கப் போகிறார். அவனுக்கு எழுபத்தைந்து வருடங்கள் ஆனபொழுது வெளியே அழைக்கப்பட்டான். சாராளுக்கு அறுபத்தைந்து வயது; பத்துவருடங்கள் அவர்களுடைய வயதில் வித்தியாசம் இருந்தது. மேலும் அவன் தரித்திருந்து, இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்து; இன்னும் நம்பிக்கையாயிருந்து; இன்னும் விசுவாசித்துக் கொண்டிருந்து, ஒரு அந்நியனாக இருக்கும்படி அறிக்கைசெய்து கொண்டு, அணுகுமுறையோடும் மற்றவற்றோடும் தேவனிடத்தில் வந்திருந்து; ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளும்படியாய் விசுவாசித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு அவன் நூறு வயது சென்றவனாயிருந்தான்... அல்லது தொண்ணூற்றொன்பது... ஆதியாகமம் பதினைந்தாம் அதிகாரத்தில் நாம் தேவனைக் காண்கிறோம். இப்பொழுது இருபத்தைந்து வருடங்கள் ஆனபிறகு, தேவன் ஆபிரகாமை அணுகினார். அவன், “இப்பொழுது ஆண்டவரே நான் வயது சென்றவனாகிவிட்டேன். ஆனால் எப்படி செய்வீர் என்பது எனக்குத் தெரியாது?, அதைச் செய்யப் போகிறீர் என்பதையும் நான் விசுவாசிக்கிறேன்”, என்று சொன்னான். ஆனால், “நீர் அதை எப்படி செய்யப் போகிறீர் என்பதை நான் அறியேன்”ஆமென். “அதை நான் சந்தேகிக்கவில்லை. அது எப்படியும் இருக்கப்போகிறது, ஆண்டவரே, ஆனால் இப்பொழுது ஒரு சின்ன வழியில் அது எப்படியாய் இருக்கப்போகிறது என்பதை எனக்கு உங்களால் காண்பிக்க முடியுமா?”, என்றான். அங்கே தான் உங்களுடைய மிகச் சிறிய விசேஷித்த ஆசீர்வாதங்கள் வருகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆண்டவரே நீங்கள் அதை எப்படி செய்யப்போகிறீர்கள், “இப்பொழுது எனக்கு வயதாகிவிட்டது, நீங்கள் அதைச் செய்யப்போகிறீர்கள். ஆனால் இப்பொழுது அதை எப்படிச் செய்யப்போகிறீர்கள் என்பதை எனக்கு உங்களால் காண்பிக்க முடியுமா?”, என்றான். நான் அதை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? “இப்பொழுது பிதாவே‚ நீங்கள் அதை எப்படிச் செய்யப்போகிறீர்கள், நீங்கள் அதை எனக்கு காண்பிக்க முடியுமா?” என்றான். 49தேவன் சொன்னார் “ஆபிரகாமே சரியாக இங்கே வா, நான் உன்னிடத்தில் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்” ஆபிரகாம், நான் தான் சர்வ வல்லவர், சர்வ வல்லமையுள்ள தேவன். என் முன்னே நடந்து சென்று மேலும் பரிபூரணமாய் இரு. அவ்விதமாகவே நான் அதைச் செய்யப்போகிறேன். நான் தான் சர்வவல்லமை படைத்த ஒருவர். 50எபிரேயவார்த்தையில் ஏல்... (EL) சர்வ வல்லமை, என்று அர்த்தம். என்னவெனில் “எல் ஷடாய்” அதினுடைய அர்த்தம் என்னவென்றால் “சர்வ வல்லமை படைத்த ஒருவர்”. அல்லது ஏல் என்றால் “தேவன்” மேலும் ஷடா என்றால் “மார்பகம்” ஷடாய் என்று பன்மையில் இருக்கிறது. நானே சர்வ வல்லமை படைத்தவர் பலமுள்ள ஒருவர் எல்லாவற்றிலும் போதுமானவர்“ நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? இப்பொழுது ஆபிரகாம், அவர் என்ன நாமத்தில் தோன்றினார் என்பதை கவனி. “நானே எல்ஷடாயாய் இருக்கிறேன்” மற்றொரு வார்த்தையில் சொல்லப் போனால் நானே மார்பகங்கள் உள்ளவர், ஆபிரகாமே‚ தேவன்... உண்மையிலே, அந்த வார்த்தை ஷ-டா-ய் வேதாகமத்திலிருந்து... வருகிறது. அதின் அர்த்தம் என்னவெனில் ஸ்திரீயைப்போல, அந்த இடம் குழந்தையை பாலூட்டுகிற இடத்தைப்போல உள்ளது. மற்றொரு வார்த்தையில் சொல்லப்போனால்“ ஆபிரகாமே நானே பலமுள்ள ஒருவர், நானே ஜீவனை அருளுகிறவர்” ஜீவனை அருளுகிற ஒருவர் மாத்திரம் இல்லை, தொல்லைக்குட்பட்ட குழந்தையைப் பார்த்துக்கொள்வது போல, “நானே திருப்தி அளிக்கிறவர்”. 51ஒரு சின்ன குழந்தை அவன் தொல்லைக்குட்படுவான் என்றால், சுகவீனமாய் இன்னுமாய் வயிற்றுவலி உடையவனாய், அவனுடைய தாயின் கைகளில் பேணிக் காக்கப்பட்டுபடுத்துக் கொண்டு இருக்கும்போதெல்லாம் அது அவனை திருப்திப்படுத்துகிறது. ஓ, என்னே‚ நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்களா? ஒருவேளை அவன் வியாதியாயிருக்கலாம் அல்லது அவனுடைய சின்ன தலை அப்படியும் இப்படியும் சுற்றிக் கொண்டிருக்கலாம் மேலும் என்னவாய் இருந்தாலும் ஆனால் அவனுடைய தாயின் மார்பகத்தில் படுத்திருந்து பராமரிக்கும்போது அது அவனை அமைதிப்படுத்துகிறது. நீங்கள் எவ்வளவாய் வியாதியுற்றிருந்தாலும், என்ன நடந்தாலும், கர்த்தர் பதிலளிக்க எவ்வளவு காலமானாலும் நீங்கள் அவருடைய மார்பகத்தில் படுத்துக்கொண்டு வார்த்தையிலிருந்து இழுத்துக்கொண்டு இருக்கும்வரைக்கும் அது ஒரு விசுவாசியை திருப்திப்படுத்துகிறது. 52“அதுதான் என்னுடைய அணுகுமுறை”; அந்த வழியாகத்தான் என்னை அணுகும்படி உன்னை நான் கேட்டுக்கொள்கிறேன். நானே உன்னை திருப்திபடுத்துகிறவர்‚ என்று சொன்னார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென். “நான் ஒருவரே உன்னை திருப்திபடுத்த முடியும் நீ என்னுடைய மார்பகத்திலிருந்து உறிஞ்சி ஜீவனை இழுத்துக்கொள்வது போல ஆபிரகாம் நீ ஒரு நூறு வயது சென்றவனாகிவிட்டாய், ஆனால் நீ எனக்கு இப்பொழுது ஒரு குழந்தையாய் இருக்கிறாய்” பாருங்கள்? நல்லது அவன் சொன்னான், என்னுடைய சரீரத்தை பாருங்கள், அது எப்படியாய் சுருக்கமாய் போய்விட்டது. மேலும் என்னுடைய தலைமுடி நரைத்துவிட்டது. மேலும் என்னுடைய தோள்களெல்லாம் தொங்கிப் போய்விட்டது“ “ஆனால் நானோ ஜீவனை அருளுகிறவர்” ஆமென். அதுதான் இது, ஆபிரகாமே‚ நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? அதன் பிறகு ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். ஏனென்றால் அவன் ஒரு அடையாளத்தின் ஊடாக ஒரு நாமத்தின் மூலமாக அந்த அணுகுமுறையைப் பெற்றுக்கொண்டான். அதனால் நாம் ஒரு நாமத்தின் மூலம் ஒரு அணுகுமுறையைப் பெற்றிருக்கிறோம். இயேசு. இயேசு என்ற நாமம் நமக்கு என்ன செய்தது?இரட்சகர்‚ ஆமென்‚ ஆபிரகாமுக்கு மார்பகங்கள் உள்ள தேவன், திருப்தி அளிக்கிறவர், பலமுள்ள ஒருவர், இரட்சிப்பைத் தருகிறவர், பலத்தைக் கொடுக்கிறவர், ஆபிரகாமுக்கு மார்பகங்கள் உள்ள தேவனாய் இருந்தார். அதேவிதமாகத் தான் விசுவாசிக்கு இயேசு இருக்கிறார். ஓ, என்னே‚ இப்பொழுது அது உங்களையும் தாங்கி செல்லவில்லையா? 53இப்பொழுது இங்கே இந்த பூமியிலே உள்ள மிகச்சிறிய காரியங்கள் எப்படியாய் அற்பமான காரியங்களாய் தோன்றச் செய்கிறது. அது போன்றே..., சிறுவர்களும் கூட அவர்களையும் நினைத்துகொள்ளுங்கள். நாம் இன்றைக்கு தேவனிடத்தில் மிகப்பெரிய சூரர்களாக இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சிறியவர்களாயில்லை, மிகச்சிறிய பிள்ளைகளாயில்லை. கிறிஸ்து நம்மிடத்தில் இருக்கும் வரைக்கும் மேலும் நம்மை ஆசீர்வதிக்கும்படி இருக்கும் வரைக்கும், மேலும் காரியங்களை செய்து கொண்டிருக்கும் வரைக்கும் அவர் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய மகத்தான காரியங்களை நாம் பார்க்கிறோம். ஆனால் இன்னுமாய் நாம் குழந்தைகளாய் இருக்கிறோம். பவுல் சொன்னார், “ஆகாரத்தை கொடுக்கக் கூடிய திறமை உடையவர்களாகிய நீங்கள், நீங்கள் இன்னுமாய் ஆகாரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆகாரத்தை எடுத்துக்கொள்ள முடியாமல், ஆனால் இன்னுமாய் பாலை உண்கிறீர்கள்” அது சரியே. இன்னுமாய் பாலை உண்ணுகிறவர்களாய் இருக்கிறீர்கள். உத்தமமான சுவிசேஷத்தின் பாலை; நீங்கள் பலமாக இருக்க வேண்டுமென்றால் மேலும் ஆகாரத்தை சாப்பிடுங்கள் பாருங்கள். என்னே, தேவன் என்ன செய்கிறார் என்பதை நாம் காணும்போது, மேலும் அவருடைய மகத்தான செயல்களை, அவருடைய வார்த்தையை நிரூபிக்கும்போது, நாம் வல்லமையுள்ள புருஷர்களாக இருக்கவேண்டும். அதுசரி. உங்களுக்கு தெரியுமா ஏனென்று? நாம் இப்பொழுது போதுமான அளவு உண்ணவில்லை. 54“ஆபிரகாமே‚ நானே பலமுள்ள ஒருவர், நானே எல்லாற்றிலும் போதுமானவர்”. 55அவர் சிங்கக் கெபியில் தானியேலுக்கு எல்லாவற்றுக்கும் போதுமானவராய்; இருந்தார். அவர் ஒரு பலமுள்ளவராய் அந்த ஒளி வடிவத்திலே தோன்ற முடிந்தது. மேலும் ஒரு சிங்கம் அவருடைய பிரசன்னத்தில் அவரை அணுக முடியவில்லை. அவர் அக்கினி சூளையில் இருந்த எபிரேய பிள்ளைகளுக்கு அவரே ஒரு வல்லமையுள்ளவராய் இருந்து அவருடைய வல்லமையால் அக்கினி ஜீவாலை புகையின் வாசனை கூட அவர்கள் மேல் வீசாதபடிக்கு போதுமானவராய் இருந்தார். “எல்லாவற்றுக்கும் போதுமான ஒருவர்” ஆமென். மேலும் ராஜாவாகிய நெபுகாத்நேச்சார் என்ன சொன்னான்? அவன், நான் “நான்கு பேரை பார்க்கிறேன்‚ நீங்கள் மூன்று பேரை போட்டீர்கள், நான் நான்கு பேரைப் பார்க்கிறேன், மேலும் ஒருவர் தேவகுமாரனைப் போல காட்சியளிக்கிறார்” என்றான். எல்லாவற்றுக்கும் போதுமான ஒருவர், அந்த அணுகுமுறை. அதை பார்த்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள், அவர் இங்கே இருக்கிறார். அற்புதமானவர்‚ 56இப்பொழுது ஆபிரகாம் வயதானவனாய் இருந்தான். இன்னுமாய் தேவன் அவனுக்கு வாக்களித்தார். மேலும், “ஆபிரகாமே இப்பொழுது இரத்தத்தை செலுத்துவது மூலமாக நீ இந்த வழியாக வந்தது தான் சரியான அணுகுமுறை. மேலும் இப்பொழுது நான் இரத்தத்தின் பின்பாக, ஒரு பாலூட்டுகிறவராய், பலத்தை கொடுக்கிறவராய், பலமுள்ள ஒருவராய், எல்லாவற்றிற்கும் போதுமானவராய்” இருக்கிறேன். இப்பொழுது அதைக்குறித்து சிந்தியுங்கள், இப்பொழுது நானே மார்பகங்கள் உள்ள ஒருவர். “ஓ”, நீங்கள் அதை கவனிக்கிறீர்களா? அவர், “நான் மார்பகம் உள்ளவர்” (EL-SHADD) என்று சொல்லவில்லை. ஆனால் மார்பகங்கள் (SHADDAI) இரட்டத்தனை, கூட்டுப் பொருள். அவர் நம்முடைய பாவங்களுக்காக மாத்திரம் மரிக்கவில்லை, ஆனால் நம்முடைய வியாதிகளுக்காகவும் மரித்தார். அவர் காயப்பட்டார்... நம்முடைய அணுகுமுறைக்கு. நம்முடைய அணுகுமுறையார்? கர்த்தராகிய இயேசு. என்னத்திற்காக அவர் காயப்பட்டார்? நம்முடைய மீறுதலுக்காக, ஒரு மார்பகம். என்னத்திற்காக அவர் தழும்புகளை ஏற்றுக்கொண்டார்? “அவருடைய தழும்புகளால் நாம் சுகமானோம்” இன்னொரு மார்பகம். யார் அவர்? “நான்- இருக்கிறவர்” அந்த மகத்தான இரு மார்பகங்கள் உள்ளவர், பலமுள்ள ஒருவர்‚ எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர்‚ விசுவாசிக்கு மார்பகங்கள் உள்ள தேவன்‚ ஆமென்‚ ஆமென்‚ இரட்டத்தனையான சுகமளித்தல், இரண்டு பரிகாரங்கள் கிடையாது. மருத்துவர்களுக்கு நோயை குணப்படுத்தும் பரிகாரங்கள் உண்டு. தேவனிடத்தில் சுகமளித்தல் உண்டு‚ சபைக்கு பரிகாரங்கள் உண்டு. ஆனால் கிறிஸ்துவிடத்தில் சுகமளிக்கும் காரியம் உண்டு - இரட்டை சுகமளித்தல். 57சார்லஸ் வெஸ்லி இதைச் சொன்னார் என்று விசுவாசிக்கிறேன். “ஒரு இரட்டை சுகமளித்தல் என்னை இரட்சித்தது... இல்லை என்னை பரிசுத்தம் செய்தது. பாவத்தில் இருந்தால் ஒரு இரட்டை சுகமளித்தல்; கோபாக்கினையிலிருந்து இரட்சித்தது. மேலும் என்னை பரிசுத்தனாய் மாற்றினது” என்று சொன்னதில் வியப்பொன்றுமில்லை. தேவன் எப்படி உங்களை பாவத்திலிருந்து, மேலும் உங்களுடைய சுகவீனத்திலிருந்து இரட்சிக்க முடியும். அந்த மார்பகங்கள் உள்ள ஒருவர்‚ அது அந்த எல்ஷடாய். இஸ்ரவேலிலே அவரே அணுகு முறையாய் இருந்தார். இஸ்ரவேலர்கள் மீட்கப்பட வேண்டும் என்ற நிலைமைக்கு ஒரு இடத்தில் அவர்கள் வந்தபொழுது தேவன் அவர்களுக்கு அணுகுமுறையை அருளினார். அவர் ஆபிரகாமை எடுக்கும் முன்பு அவனுக்கு அவருடைய அணுகுமுறையைக் காண்பித்தார். அவர் யோபுவை பயங்கரமான சோதனையின் மூலமாக விடுவிக்க கூடிய நிலைமைக்கு முன்பு, அவனுக்கு அவருடைய அணுகுமுறையைக் காண்பிக்க வேண்டியதாயிருந்தது. தேவன் இஸ்ரவேலை வெளியே எடுக்கக் கூடிய நிலைமைக்கு முன்பு அவன் அந்த அணுகுமுறையைக் காண வேண்டியதாயிருந்தது. 58அதனால் மோசே அவர்களுக்கு ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை கொல்வதற்கு கட்டளை கொடுத்திருந்தான். மேலும் அதை ஒரு சிலுவையின் அடையாளமாக கதவுகளில் தெளிக்க வேண்டுமென்று கட்டளை கொடுத்திருந்தான். மேலும் விசுவாசிக்கு தெளிக்கப்பட்ட பிறகு அவன் உட்புறமாக... வேதத்தின் ஒழுங்கிலுள்ள தனி சிறப்பை கவனியுங்கள், முக்கியத்துவமானதை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு விசுவாசி அணுகுமுறையின் மூலம் ஒருமுறை இரத்தத்தின் பின்பாக சென்ற பிறகு வெளியே போக முடியாது. இரத்தத்தின் மூலமாகவே அவன் செல்லவேண்டியதாயிருக்கிறது. மரணம் வீதியில் இருந்தது. மரண தூதன் இரத்ததத்தைத் தொடமுடியாது.“ அந்த இரத்தத்தைக் கண்டு நான் உங்களைக் கடந்துபோவேன்”. மேலும் விசுவாசி அணுகுமுறையின் மூலமாக வந்தாகவேண்டும். தேவன் அவர்களுக்கு அற்புதங்களைக் கொடுக்கப் போகிறார், அவர்களை பூண்டு சட்டிகளிலிருந்து வெளியேற்றி தூதர்களின் உணவைச் சாப்பிடும்படி செய்யப்போகிறார். ஆனால் அவர் அந்த அணுகுமுறையைப் பெறும் வரைக்கும் அதை அவர் செய்ய முடியாது. ஆமென். 59அவர் அவர்களை அந்த பழைய எகிப்திய சேற்று நீரிலிருந்து வெளியே கொண்டு வந்து கன்மலையிலிருந்து அந்த ஜீவ தண்ணீரை அவர்களுக்குக் கொடுக்கப் போகிறார். அவர் அந்த அணுகுமுறையை பெறும் வரைக்கும் அதை அவரால் செய்ய முடியாது. அவர்கள் அதை வாஞ்சையினால் செய்ய முடியாது. அங்கே ஒரு அருளப்பட்ட அணுகுமுறை இருக்கவேண்டும். அவர்கள் சிவந்த சமுத்திரம் திறக்கப்படுவதைப் பார்க்க வேண்டும். அவர்கள் அற்புதங்கள் நிகழபோவதைப் பார்க்க வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் அவர்கள் பார்ப்பதற்கு முன்பாக, (இது இருதயத்தில் ஆழபதியட்டும்) அவர்கள் தேவனால் அருளப்பட்ட அணுகுமுறையின் மூலமாக வந்தாக வேண்டும். நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா கிறிஸ்தவர்களே? 60அவர்கள் ஏதோ இப்பொழுது வாஞ்சையின் காரணமாக அதை பார்க்க முடியாது. நீங்கள் ஏதோ ஒன்று நடப்பதைப் பார்க்க வேண்டுமென்ற காரணத்தினால் கிடையாது. நீங்கள் கிறிஸ்து சரியானவரா இல்லையா என்று பார்க்க விரும்புவீர்கள் என்றால், தேவனால் அருளப்பட்ட அணுகுமுறையின் மூலமாக அவரிடத்தில் வரவேண்டும். அதன் பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இப்பொழுது, விருத்தசேதனமில்லாதவர்கள் அதே காரியத்தை வந்து செய்ய முயற்சித்தார்கள். அதே காரியத்தை செய்யும்படி ஆனால் அவர்கள் முழுகிப் போனார்கள், நீங்கள் உங்கள் ஜீவியத்தில் பேரழிவில் சிக்காமல் இருக்க விரும்பினால், நீங்கள் கிறிஸ்துவனாக இருப்பது போல நடிப்பதை விட்டுவிடுங்கள், ஏனென்றால் நீங்களாகவே இங்கே ஏதோ ஒரு இடத்தில் பேரழிவில் சிக்கிக்கொள்வதைக் கண்டு பிடிக்கப்போகிறீர்கள். ஆம், நீங்கள் தேவனால் அருளப்பட்ட அணுகுமுறையின் மூலமாக வரவேண்டும். 61நான் இந்த மதிய வேளையில் வீட்டுக்குப்போவதற்கு வயல் வெளியின் குறுக்கே செல்வேன் என்றால், நானாகவே எங்கோ ஒரு மணல் சகதியிலே மூழ்கிப் போவதைக் கண்டுகொள்வேன். நான் ஜெபர்சன்வில் செல்வதற்கு பெருவழியே ஒரு அணுகுமுறையாய் உள்ளது. மேலும் நான் பெருவழியின் வழியாகத்தான் போய் ஆகவேண்டும். நீங்கள் சாலையில் செல்வீர்கள் என்றால், அது சுலபமாக செல்லக்கூடிய வழியாக இருக்கிறது. நீங்கள் சுயத்திற்கு மரிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மூலமாக வரவேண்டும், அதன் பிறகு நீங்கள் பிதாவினிடத்தில்அணுகமுடியும். மேலும் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார். அது உங்களை ஒரு விசுவாசியாகச் செய்யமுடியும். ஏனெனில் இனி விசுவாசிப்பது நீங்களல்ல அது உங்களிடத்திலிருக்கும் பரிசுத்த ஆவியானவரே. உங்கள் சுபாவம் மாறிவிட்டது. ஓ, நமக்கு அதிக நேரம் இருக்க விரும்புகிறேன். ஆனால் என்னுடைய நேரம் கடந்து சென்றுவிட்டது. ஓ, நான் இப்பொழுது வார்த்தையை நேசிக்கிறேன், நீங்களும் நேசிக்கிறீர்களா? 62பாருங்கள், அவர்கள் அற்புதங்களை பார்ப்பதற்கு முன்பாக, அவர்கள் அருளப்பட்ட அணுகுமுறைக்கு வந்தாக வேண்டும். அவர்கள் சிவந்த சமுத்திரம் திறப்பதை பார்ப்பதற்கு முன்பாக அவர்கள்அந்த மகிமையில் பங்கு கொள்பவர்களாக இருக்க வேண்டும். மகிமையில் பங்கேற்பவர்களாக அவர்கள் மாறுவதற்கு முன்பாக அந்த தெய்வீக அணுகுமுறையில் பங்கு கொள்பவர்களாக இருப்பதற்காகவும், தெய்வீக நிபந்தனைகளில் இருப்பதற்காகவும், மேலும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரலோக அழைப்பிலே ஒரு பங்கு உள்ளவர்களாக எக்காலத்திலும் மாறும்படியாகவும் ஆவதற்கு முன்பாக, அவர்கள் அருளப்பட்ட தேவனுடைய அணுகுமுறைக்கு வந்தே ஆக வேண்டும். நீங்கள் அருளப்பட்ட அணுகுமுறையின் மூலமாக வந்தே ஆக வேண்டும். சுய போஷாக்கினால் அல்ல, புத்தி கூர்மையுடையவர்களாய் அல்ல, ஆனால் நீங்கள் சுயத்திற்கு மரித்து மேலும் இயேசுகிறிஸ்துவின் அர்ப்பணிக்கப்பட்ட இரத்தத்தின் மூலம் மறுபடியும் அவரில் பிறந்தவர்களாய் இருக்க வேண்டும். 63அதன் பிறகு, “ஓ, என்னே, இந்த காரியங்கள் எல்லாம் நான் ஏன் வெகு காலத்திற்கு முன்பாக அறிந்து கொள்ளவில்லை?” என்று சொல்வீர்கள். நீங்கள் உங்கள் சபையின் மூலமாய் வருவதற்கு முயற்சி செய்தீர்கள். நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தின் மூலமாய் வருவதற்கு முயற்சி செய்தீர்கள். நீங்கள் ஈடான அல்லது ஏதோ ஒன்றின் மூலமாய் மற்றொன்றின் மூலமாய் வருவதற்கு முயற்சி செய்தீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்த நற்கிரியைகளின் மூலமாய், நற்பண்புகளின் மூலமாய் வர முயற்சி செய்தீர்கள். அந்த காரியங்களுக்கு நீங்கள் மரிக்கும் வரைக்கும் மேலும் தேவனுடைய அருளப்பட்ட அணுகுமுறைக்கு வரும் வரைக்கும், நீங்கள் அதை அடையமுடியாது. மேலும் உங்களால் அதை அணுக முடியாது. அது இயேசு கிறிஸ்துவாய் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாய் இருக்கிறது. பாவிக்கு தேவனிடத்திற்கு வரும்படி தேவனால் அருளப்பட்ட வழி அதுவே. நீங்கள் பழைய ஏற்பாட்டின் நன்மைகளினாலும், மேலும் புதிய ஏற்பாட்டின் நன்மைகளினாலும் ஒருபோதும் பேணி வளர்க்கப்பட முடியாது; நீங்கள் சந்தோஷத்தைப் பேணி வளர்க்க முடியாது; மேலும் சமாதானத்தை; திருப்தியையும், உங்களுடைய சரீர சுகத்தையும் பேணி காக்க முடியாது. நீங்கள் விலகியிருந்து குறை கூறுவீர்கள், “ஓ இது ஒரு வெகு காலத்திற்கு முன்பாக இருந்திருக்கவேண்டும். ஆனால் எல்லா அணுகுமுறையும் இப்பொழுது காய்ந்து போய்விட்டது” என்று சொல்வீர்கள். கவனியுங்கள். கிறிஸ்து தேவனுடைய அணுகு முறையாய் இருப்பார் என்றால், அதன்பிறகு தேவன் எல்ஷடாயாக இருக்கிறார். ஆமென். அதனால் அருளப்பட்ட வழியில் வாருங்கள். விலகிச் செல்ல முயற்சிக்காதீர்கள். அருளப்பட்ட வழியிலே வாருங்கள். 64அழகான உவமை, நாம் அதற்குள்ளாக போக நமக்கு நேரம் இருக்குமென்றால், கல்யாண விருந்திற்கு எப்படி அந்த மணவாளன் கல்யாண வஸ்திரத்துடன் அழைத்தான் என்றும், மேலும் கல்யாண வஸ்திரம் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாகச் செய்யப்பட்டது. அவர்கள் ஒரு கதவண்டையில் நின்றார்கள், மேலும் அவர்கள் வந்தபோது, கிழக்கத்திய நாடுகளிலும், மேலும் இந்தியாவிலும் அதைப் போன்று அவர்களுக்கு அழைப்பைக் கொடுப்பார்கள். மிகவும் அழகாக, இன்னுமாய் அப்படியே செய்கிறார்கள். மேலும் அழைக்கப்பட்ட அனைவரும் அவர்களுடைய அங்கியைப் பெற்றுக்கொண்டார்கள். நான் அதை நேசிக்கிறேன். அதன்பிறகு 65அவர்கள் கதவண்டையில் வந்தபொழுது அங்கே ஒரு மனிதன் கதவண்டையில் அந்த அவர்களுடைய அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொண்டிருந்தான். அவர்கள் அந்த அங்கியை அணிந்திருந்து அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். இன்னொருவர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அதன்பிறகு விருந்து ஆயத்தப்படுத்தப்பட்டது. அவர்கள் உள்ளே வந்தபோது, அங்கே ஒரு மனிதன் அங்கி இல்லாமல் இருப்பதை அந்த மனிதன் கண்டுபிடித்தான். என்ன நடந்தது? அது அவன் ஒரு ஜன்னல் வழியாய் வந்ததைக் காண்பித்தது. கதவண்டையில்வராமல், விலகி மற்றொரு வழியிலே வந்திருந்தான். அவன் அருளப்பட்ட அணுகுமுறையில் வரவில்லை. ஏனென்றால் கதவண்டையில் நிற்பவர் அவனைத் திருப்பி அனுப்பியிருப்பார். அங்கியானது எல்லாரையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகச் செய்யப்பட்டது. நீங்கள் பணக்காரரோ அல்லது ஏழையோ; அடிமையானவரோ அல்லது விடுதலையானவரோ, எல்லாரும் அங்கியை உடையவர்களாய் இருக்கும்போது அந்த அங்கியை தரித்திருந்தால் நீங்கள் பார்ப்பதற்கு மற்றவர்களைப் போல இருப்பீர்கள். நீங்கள் அங்கியைப் பெற்றிருக்கும்போது உங்கள் விருப்பம் போல கவர்ச்சியான ஆடைகளைக் காண்பிக்க முடியாது. 66ஆகவே, அதன்பிறகு அது அவன் ஒரு ஜன்னல் வழியாய் உள்ளே வந்ததைக் காண்பித்தது அல்லது பின் கதவு வழியாய் அல்லது கதவுக்கு விலகி வந்திருப்பான். “நண்பனே இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” இயேசு சொன்னார். மேலும் அவன் வாயடைத்துப் போனான். பாருங்கள், தேவனுக்கு ஒரு அணுகுமுறை இருக்கிறது. மேலும் நாம் அந்த அணுகுமுறைக்குள் வந்தே ஆகவேண்டும். மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுயத்திற்கு மரித்து அந்த அணுகுமுறையின்படி கிறிஸ்துவிடத்தில் வரவேண்டும். மறு உற்பத்தியாகி, மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்டு உனக்கு அருளப்பட்ட தேவனுடைய நீதியின் வஸ்திரத்தை உன்மேல் அணிந்தவனாய்; அதிலிருந்து கிறிஸ்துவுக்காக ஜீவிக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய அருளப்பட்ட அணுகுமுறையில் வருகிறீர்கள். 67அதன்பிறகு நீங்கள் புதிய ஜீவனைப் பெற்றுக்கொண்டீர்கள். பழைய பாவ ஜீவியம் மரித்துவிட்டது. பழைய மாமிச சிந்தையானது தேவன் எங்கேயோ, தொலைவில் இருக்கிறார், பலவருடங்களுக்கு முன்பாக... தேவன் ஒருவர் ஜீவிக்கிறவராய் இருக்கிறவர், எங்கோ ஓரிடத்தில் மாத்திரம் அல்ல, ஆனால் இப்பொழுதே இங்கேயே சரியாக இருக்கிறார். அவர் சொன்ன அந்த எல்லா காரியங்களும் உண்மையாய் இருக்கிறது. மேலும் நீங்கள் அதில் ஒவ்வொன்றையும் விசுவாசியுங்கள். 68அதன்பிறகு நீங்கள் யாரையும் குறை கூறாதீர்கள். நீங்கள் உங்கள் மேய்ப்பரிடத்தில் எந்த தப்பையும் கண்டுபிடிக்காதீர்கள். மேலும் எல்லாருடனும் சேர்ந்துகொண்டு... அந்த ஸ்திரீகள் இவ்விதமாகப் பேசுகிறார்கள். நீங்கள் அவர்களுக்காக வருத்தப்பட்டு, மேலும் அவர்களுக்காக ஜெபியுங்கள். அப்படியானால் தேவனுடைய அருளப்பட்ட வழியிலே நீங்கள் வருகிறீர்கள், பாருங்கள். கிறிஸ்து உங்களிடத்தில் உள்ள அதிகமான தவறுகளை கண்டுபிடிப்பார் என்றால், அவர் உங்களுக்காக மரித்திருக்கமாட்டார். ஆனால் பாருங்கள், அவர் தேவனுடைய அணுகுமுறையாய் இருந்து அவர் மூலமாய் நம்முடைய அணுகுமுறையானார். நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா?இப்பொழுது கவனியுங்கள். இஸ்ரவேலர்களுக்கு சுகம் தேவையாயிருந்தபோது எல்ஷடாய்... அவர்களுக்கு சுகம் தேவைப்பட்டபோது அவர் ஒரு நிபந்தனையை கொண்டிருந்தார். ஒரு தெய்வீக நிபந்தனை அங்கே இருந்தது. அது ஒரு பிரதிநிதித்துவமான வழியாக இருந்தது. ஒரு சர்ப்பத்தை அவர்கள் பார்த்து விசுவாசித்து அவர்கள் சுகம் அடைந்தார்கள். இப்பொழுது நமக்கு நேரம் இருக்க விரும்புகிறேன். ஆனால் உண்மையில் அது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம். 69இப்பொழுது அந்த அருமையான காரியங்கள் எல்லாம்... மற்ற அநேக குணாலட்சனங்களை இப்பொழுது என்னுடைய இருதயத்தில் நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இப்பொழுது துரிதமாகச் செல்ல வேண்டும். கவனியுங்கள். இப்பொழுது, கிறிஸ்தவனுடைய அணுகுமுறையை பற்றி என்ன? நாம் எப்படி அணுகுகிறோம்? ஒருநாள், தேவன் ஏதேன் தோட்டத்திலே செய்தது போல, கபடமில்லாத ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை எடுத்து அது கிறிஸ்து இயேசுவின் மாதிரியாக இருந்தது, மேலும் அதை ஒரு போர்வையாக மூடும்படியாகக் கொன்று, செம்மறி ஆட்டுக் குட்டியிலிருந்து எடுத்து, செம்மறி ஆட்டுகுட்டியை தோலுரித்து மேலும் அதை ஒரு பாவியான மனிதன் மேலாகப் போட்டு அது அவனுக்கு போர்வையாக இருக்கும்படியாக கபடற்ற அந்த செம்மறி ஆட்டுக்குட்டியினால் அதைச் செய்தார். தேவன் தன்னுடைய குமாரனை கல்வாரிக்கு எடுத்துச்சென்று அவருடைய மாமிசத்தை அவரிடத்திலிருந்து உரித்து, இரத்தத்தை வெளியே ஊற்றி, அந்த இரத்தத்திலிருந்த ஜீவ அணுவை, ஆவியை வெளியே கொண்டு வந்து அது அவனை இயேசு கிறிஸ்துவின் நீதியை எடுத்துக்கொள்ளும்படியாக மேலும் அவனுடைய குற்றத்தை மூடும்படியாகச் செய்தது. அங்கே தான் தேவனுடைய அணுகுமுறை இருந்தது. 70அங்கே ஏதாவது தெய்வீக நிபந்தனை அதனுடன் சென்றதா? ஆம் அதன் பிறகு தேவன் அவருடைய கிருபையினாலே, கிறிஸ்துவை அவருடைய வலதுபாரிசத்தில் அமர வைத்துவிட்டு பிறகு, பரிசுத்த ஆவியைத் திரும்ப அளித்தார். மேலும் பரிசுத்த ஆவியானவர் சபையிலே அடையாளங்களை நியமித்தார். அப்போஸ்தலர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள், சுகமளிக்கும் வரங்கள், அற்புதங்கள், அந்நிய பாஷைகளை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல், அடையாளங்களும் மேலும் அற்புதங்களும் உங்களுக்கு நிபந்தனைகளாக தொடர்ந்து சபையிலே போகும்படியாகச் செய்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் தேவனுடைய ஜீவனிலிருந்து வந்த பரிசுத்த ஆவியே தெய்வீகமாக, தெய்வீக மன்னிப்பு அளித்தல் என்பதன் பிரசன்னமாகவும், பிரதிநிதித்துவமாகவும் இங்கே இருக்கிறார். அவருடைய பிரசன்னம் இப்பொழுது இங்கே இருக்கிறது. வார்த்தையை பிரசங்கிப்பது அவருடைய பிரசன்னத்தை கொண்டு வருகிறது. அற்புதங்கள் செய்வது அவருடைய பிரசன்னத்தை கொண்டு வருகிறது. மேலும் நீங்கள் வரும்போது நீங்கள் சொல்வீர்கள் “நான் தேவனை அணுக விரும்புகிறேன்” என்று. சிலர், “நல்லது இப்பொழுது நான் எப்படி அணுகுவது?” என்று சொல்வார்கள். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவருடைய அருளப்பட்ட அணுகுமுறையில் வாருங்கள். அதன்பிறகு அவர் மற்ற காரியங்களை உடையவராயிருக்கிறார். வார்த்தையை போதிப்பது, அவர் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறார், அவரிடத்தில் தரிசனங்கள் இருக்கிறது, மேலும் அற்புதங்ளும் அடையாளங்களும் மேலும் அதிசயங்களையும் மேலும் அந்த எல்லா காரியங்களும் சரியாக அவருடைய தெய்வீக அணுகுமுறையுடன் வருகிறது. அது உங்களை அவரிடத்தில் வழிநடத்திச் செல்லும். மேலும் நித்திய ஜீவனைப்பற்றிப் பிடித்துக்கொள்ளும்படியாய் செய்யும். 71இப்பொழுது முடிக்கும் முன்பாக வழியிலே, சிலநாட்களுக்கு முன்பாக மார்பகங்கள் உள்ள அந்த எல்ஷடாயைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, “ஓ” பல வருடங்களுக்கு முன்பாக கர்த்தருடைய தூதனானவர் எனக்குக் காட்சி அளிக்கும் முன்பாக, நான் என்னுடைய அறையிலே, இரவில் உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்... அல்லது மாறாக என்னுடைய தாயாரின் வீட்டில் என்னுடைய தாயார் ஒரு பழையகாலத்து பாணியான ஒரு நாட்டுப்புற பெண்மணி. அவர்கள் அவருடைய துணிகளை துவைத்து மேலும் அதை ஒரு பெரிய கூடையிலே போட்டு, மூலையின் ஓரமாக வைத்து ஒரு நாற்காலியாக இருந்தது, மேலும் துணிகளை அந்த நாற்காலியில் எறிந்துவிடுவார்கள். மேலும் நான் சரியாக என்னுடைய மனைவியை இழந்து மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு பிறகு தனிமையில் இருந்து வெளியேவர முயற்சிக்கும்போது நான், “அம்மா நான்- நான் - நான் உங்களிடத்தில் நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்”, என்றேன். 72அவர்கள் சொன்னார்கள் “பில்லி உட்கார்” மேலும் நான் உட்கார்ந்தேன். மேலும் நாங்கள் தேவனைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அதனால் நான் மற்றொரு அறைக்கு சென்று, நான் இப்பொழுது சிறிது நேரம் ஜெபிக்கவேண்டும் என்ற உணர்வுகொள்வது போல விரும்புகிறேன் அம்மா என்று சொன்னேன். “நல்லது உனக்கு நீயே உதவிசெய்து கொள்” என்று அவர்கள் சொன்னார்கள். மேலும் அந்த அறைக்கு சென்று முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினேன். நான் ஒரு மணி வரைக்கும் ஜெபித்தேன். நான் எழுந்து மேலும் நான் நினைத்தேன், நல்லது, நான் வீட்டில் நடக்க விரும்பினேன். மேலும் அதன் பிறகு அந்த மூலையைப் பார்த்தேன், நான் நினைத்தேன் அம்மாவுடைய துணிகள் நாற்காலியில் இருந்ததைப் பார்த்தேன், ஏதோ ஒரு வெண்மையாக, ஆனால் அங்கு துணி இருப்பதற்கு பதிலாக அது அந்த வெளிச்சம் ஆக இருந்தது அசைந்து கொண்டு, என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மேலும் அது என்னிடத்தில் வந்தபோது, ஒரு சிறிய பழைய வீட்டை நான் பார்த்தேன், “சிறிய துப்பாக்கி வீடு என்று நாம் அதை அழைப்போம். சிறிய இரண்டு அல்லது மூன்று அறைகள் ஒரே வரிசையில் உள்ளது போல்; மேலும் அதனால்... நான் அதுவரைக்கும் நடந்து சென்றேன் தெற்கிலிருந்து வடக்குப்புறமாக போய்க்கொண்டிருந்தேன். மேலும் நான் அந்த இடத்தை அடைந்த பிறகு, அந்த சுவற்றின் மேலாக சிகப்பு நிற காகிதம் இருந்தது. ஒரு சிறிய சுவரொட்டி, படுக்கையில் மேலும் ஒரு சிறிய பையன் அதில் படுத்துக் கொண்டிருந்தான். அவன் மிகச்சிறிய, சின்னதான, மிகச்சிறிய உதடுகளை உடையவனாய் மேலும் சிறிய நீலநிற மேல் ஆடையை அணிந்தவன் போலக் காணப்பட்டான். மேலும் அவனுடைய சிறிய சரீரமானது வளைந்து இருந்தது. மேலும் வளைந்து, வளைந்து இருந்தது. அவனுடைய சிறிய கைகள் பக்கத்தில் காயப்பட்டிருந்தது. ஒவ்வொரு காலும் சுற்றி வளைந்திருந்தது. மேலும் அவனுடைய சரீரம் பார்ப்பதற்கு ஏதோ ஒன்று வலதுபக்கத்திலிருந்து பிடித்து கொண்டிருப்பது போல வளைந்து இருந்தது. மேலும் இங்கே இதுவரைக்கும் அவனுடைய சரீரம் வளைந்து இருந்தது. 73நான் நினைத்தேன், ஓ இரக்கம், அது அவைகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்... அது தரிசனங்களாக இருந்தது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அது அப்படியாக இருக்காது என்றும், அது அப்படி நடக்காது என்றும் நான் இப்பொழுது கற்பிக்கப்பட்டிருந்தேன். என்னால் அதற்கு உதவிசெய்ய முடியவில்லை. மேலும் அங்கே நின்று கொண்டிருந்து, அந்த சிறிய பையனை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மேலும் நான் நினைத்தேன்,ஓ, என்னே, அந்த பரிதாபமான சிறிய பையன். மேலும் அவனுடைய தகப்பனார் சென்று அவனை தூக்கிகொண்டு, என்னிடத்தில் அவனைக் கொண்டு வந்தார். மேலும் நான் இங்கே நின்று கொண்டிருந்தபோது ஒரு சத்தத்தை கேட்டேன். நான் இதற்கு முன்பாக தூதனைக் கண்டதில்லை. மேலும் பல வருடங்களுக்குப் பிறகும் நான் அப்படிப் பார்க்கவில்லை. ஆனால் நான் எப்பொழுதும் அந்த சத்தத்தைக் கேட்கிறேன். ஆனால் அவர் இங்கு நின்று கொண்டு, “இப்பொழுது அந்த குழந்தையின் மேலாக உன்னுடைய கரத்தை வை” என்று சொன்னார். நான் அந்த குழந்தையின் மேலாக என்னுடைய கரத்தை வைத்தேன். நான் பார்த்தேன் அந்த குழந்தை மூலையிலிருந்து கீழே இடித்துகொண்டு, அவனுடைய தந்தையின் கையிலிருந்து விடுபட்டு, இப்பொழுது ஒரு கால் சுருண்ட நிலையிலிருந்து இழுக்கப்பட்டது. மேலும் மற்றொரு கால் சுருண்ட நிலையிலிருந்து நீளமாக இழுக்கப்பட்டது. அதன் பிறகு அவனுடைய சரீரமும் சுருண்ட நிலையிலிருந்து இழுக்கப்பட்டது. அதன் பிறகு அவன் என்னிடத்தில் குறுக்கே நடந்து வந்து, அவனுடைய கைகளை என்மேல் போட்டான். அவன் பார்ப்பதற்கு ஒரு சிறிய வெண்மையான மீசையை உடையவனாய் காணப்பட்டான். அல்லது அவனுடைய உதடுகளில் சாக்லேட் பால் அதை போன்று உள்ளவனாய் காணப்பட்டான். அவன் சொன்னான், “சகோதரன் பிரான்ஹாம் நான் முழுவதுமாய் சரியாகிவிட்டேன் என்று”. 74மேலும், நான் அந்த தரிசனத்திலிருந்து வெளியே வந்தேன். ஏனென்றால் அது அதிகாலையாய் இருந்தது. மேலும் யாரோ ஒருவர் கதவை தட்டிக்கொண்டிருந்தார். மேலும் அது அப்போழுது ஒரு மனிதன் கூச்சலிட்டு கொண்டிருந்தார். “சகோதரி பிரான்ஹாம் இங்கே சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருக்கிறாரா?” அம்மா அவர்கள் எழுந்திருக்கவில்லை, எழுந்திருக்க முடியவில்லை. மேலும் நான் அப்படியாய் அதைவிட்டு வெளியே வந்து உங்களுக்குத் தெரியும் மேலும் நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் அவர்கள் சொல்வதை கேட்டேன் “பில்லி” 75மேலும் “ஆம்” என்று நான் சொன்னேன், “யாரோ ஒருவர் கதவின் அருகில் இருக்கிறார்” என்று அவர்கள் சொன்னார்கள். மேலும் நான் கதவண்டையில் சென்று மேலும் திறந்து பார்த்தேன் அது திருவாளர் எமில். (Emil) அவர் சொன்னார் “ஹல்லோ பில்லி” மேலும் நான் சொன்னேன், “ஹல்லோ அங்கே ஜான்” நான் சொன்னேன் “நான் உங்களை அதிக நாட்களாக பார்க்கவில்லை”, “உள்ளே வாருங்கள்” என்றேன். மேலும் அவர் உட்கார்ந்தார், மேலும் என்னுடைய முகத்தை நான் தேய்த்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் (தரிசனம் காணும்போது) அந்தக் காரியங்கள் நிகழும்போது எனது முகம் மரத்துப்போகிறது. சிலர் தபாலில் “உங்கள் முகத்தை எப்போதும் ஏன் தேய்க்கிறீர்கள்” என்று கேட்கிறார்கள். அது மரத்துவிடுகிறது. ஆகவே நான் உட்கார்ந்து எனது முகத்தைத் தேய்க்கிறேன். மேலும் இது பதினாறு வருடங்களுக்கு முன்பாக இருந்திருக்க வேண்டும் என்று நான் யூகிக்கிறேன். அதனால், அவர் சொன்னார், “நல்லது பாருங்கள் பில்லி” அவர்கள் சொன்னார். முதல் காரியமாக நான் சொல்ல விரும்புவது, அது நான் என்ன செய்தேனோ அதற்காக நான் வருந்துகிறேன் என்றார். 76நான் சொன்னேன் “என்ன காரியம்” திருவாளர் எமில்? அவர் சொன்னார் 'உங்களுக்கு நினைவிருக்கிறதா, அந்த நாளிலே ஆற்றங்கரையில் நீங்கள் சோளத்தை அதன் அடிப்பக்கத்திலே வெட்டிக்கொண்டிருந்தீர்கள், மேலும் நாம் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருதோம், நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து எங்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தீர்கள்? நான் சொன்னேன், “ஆம்” மேலும், “நீங்கள் என்னை எடுத்து உங்களுடைய சீருடையுடன், என்னையும் என்னுடைய குடும்பத்தையும் நதிக்கு கூட்டி சென்று எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்கள்” நான் சொன்னேன், “ஆம்” அதை செய்தேன் அநேகமுறை அந்த காரியங்களை நான் ஒருவிளையாட்டு பாதுகாவளராக (Game worden) இருந்த போது என்னுடைய சீருடையுடன் தண்ணீருக்கு மேலே நடந்து சென்று மேலும் ஞானஸ்நானம் கொடுத்து விட்டு மேலே வந்து சிறிது நேரம் காயவைத்து சுற்றிலும் ஓடி, என்னுடைய காரை எடுத்துக்கொண்டு மறுபடியும் கண்காணிப்பு (Patrol) வேலையைச் செய்வேன். பாருங்கள், அது ஒரு காரியமுமில்லை, உங்களுக்கு அதிகபடியான ஆடம்பரமும், சரக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஒரு விசுவாசி தயாராக இருக்கும்போது அவருக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். ஞானஸ்நானம் எடுக்க இருப்பதற்கு அது நேரமாக இருக்கிறது. எதுவானாலும் தேவனுக்கு சடங்காச்சாரமான காரியம் ஒன்றுமில்லை.. அது “விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்”, என்று இருக்கிறது. 77அவர் சொன்னார், “நல்லது சகோதரன் பிரான்ஹாம்” அவர் சொன்னார், எனக்கு இரண்டு சிறிய பிள்ளைகளும் அதன் பிறகு இரண்டு சிறிய மகன்கள் இருக்கிறார்கள். மேலும் நான் சொன்னேன், “ஆமாம் நான் ஞாபகம் வைத்திருக்கிறேன்” அது நான்கு, ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கும். அவர் சொன்னார், நல்லது நான் வருந்துகிறேன், “நான் தவறான பாதையில் சென்றுவிட்டேன்” அவர் சொன்னார், “நான் இங்குள்ள மின் நிலையங்கள் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். அவர் சொன்னார் நான் ஒரு மனிதனை கொன்றுவிட்டேன். மேலும் அவர் சொன்னார், நான் அவரை ஒரு சுத்தியால் அடித்தேன். நாங்கள் ஒரு சண்டையில் இருந்தோம். அவர் என்னை முதலில் அடித்தார், மேலும் அங்கிருந்த ஒரு பெரிய தொட்டியில் என்னை உதைத்து தள்ளிவிடப் போனார். அங்கே கொதிக்கும் பருத்தியை அதற்குள் கொஞ்சம் வைத்திருப்பார்கள், அல்லது அது எப்பொழுதும் அங்கே இருக்கும்”. மேலும் சொன்னார், “மேலும் அவர் என்னை அடித்தார், நான் ஒரு சுத்தியை கையில் எடுத்து அந்த மனிதனை அடித்தேன். அது அவரை கொன்றுவிட்டது” அவர் சொன்னார், “நான்... நான் அதற்காக ஒரு வருடம் சிறையில் வேலை செய்தேன், ஏனென்றால் அது தற்பாதுகாப்புக்காக. 78அவர் சொன்னார் நான் வீட்டுக்கு வந்தபின் தேவனிடத்திற்கு போவதற்கு பதிலாக நான் குடிக்க ஆரம்பித்தேன். மேலும் தவறு செய்துகொண்டிருந்தேன். மேலும் சொன்னார், “என்னுடைய மூத்த மகனை நான் இழந்து போனேன்” அவர் சொன்னார், “சகோதரன் பிரான்ஹாம்”, “இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த பட்டணத்தில் உள்ள மருத்துவர் டாக்டர் ப்ரூனர் (Bruner) இப்பொழுது தான் என்னுடைய வீட்டிலிருந்து சென்றார். என்னுடைய மற்றொரு சிறிய பையன் நிமோனியாவில் மரித்துக் கொண்டிருக்கிறான்” என்று சொன்னார். அவர் சொன்னார், “மருத்துவர் சொல்கிறார் அவன் விடியற்காலம் வரைக்கும் அவனால் ஜீவிக்க முடியாது” அவர் சொன்னார், நான் உங்களிடத்தில் வரலாம் என நினைத்து, நான் என்ன செய்தேனோ அதற்காக நீங்கள் என்னை மன்னிப்பீர்களா என்று கேட்டுக்கொண்டு மேலும் நீங்கள் வந்து என்னுடைய மகனுக்காக ஜெபம் செய்வீர்களா?“ “ஏன்”, நான் சொன்னேன் “நிச்சயம் சகோதரனே”, என்று நான் சொன்னேன். 79அவர் சொன்னார், “என்னுடைய பெற்றோரின் உடன் பிறந்த சகோதரரின் மகனை என்னோடு கூட்டிவரப் போகிறேன். அவர், கிரஹாம் ஸ்நெல்லிங் என்னுடைய உடன் ஊழியர்களில் ஒருவராக மாறினால் அவர், அவர் ஒரு கிறிஸ்தவர் என்றார். நாம் எல்லோருமாக சேர்ந்து கொண்டு ஜெபிக்கலாம் என்று நான் நினைத்தேன். அம்மா உள்ளே வந்தார்கள். “நான் தயாராக இருக்கிறேன். மேலும் நீங்கள் திரும்பி வந்து என்னை கூட்டி கொண்டு செல்லுங்கள்” என்று நான் சொன்னேன். அம்மா தயார் ஆனார்கள்... அல்லது, நான் என்னை தயாராக்கிக் கொண்டேன். மேலும் வெளியே சென்றுவிட்டேன். மேலும் அம்மா, “பில்லி அங்கே காரியம் என்னவாக இருந்தது?” என்று கேட்டார்கள். “அம்மா அது ஒரு தரிசனம்” என்று நான் சொன்னேன். “இந்த மனிதனுக்கு ஒருசிறிய மகன் இருக்கிறான், நான் விசுவாசிக்கிறேன் அது சுகமாகப் போகிறது”, என்று நான் சொன்னேன். அவரை அவர்களுக்குத் தெரியாது. மேலும், “நல்லது, இந்த காலை வேளையில் அவன் சுகம் அடையப்போகிறான் என்று நான் விசுவாசிக்கப் போகிறேன்”, என்று நான் சொன்னேன். மேலும் நீ போகிறாயா... நீ இப்பொழுது போகவில்லையா? என்று அவர்கள் கேட்டார்கள். நான் சொன்னேன், “ஆமாம் நான் இப்பொழுது போகிறேன். எனக்காக அவர் வருகிறார்”. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு, அவர் என்னைக் கூட்டிச் சென்றார். நாங்கள் சாலையிலே செல்லத் தொடங்கினோம் மேலும் அவர், “அங்கே பழைய கப்பல் கட்டும் துறையின் பக்கமாக சேர்ந்து சென்று, நதிக்கு பக்கத்தில் மேலே சென்று கொண்டிருக்கிறோம்”, என்றார். 80மேலும் நான், “திருவாளர் எமில் அவர்களே, நீங்கள் எங்கு ஜீவிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் சொன்னார், “நான் ஊட்டிகாவில் உள்ள அந்த நாட்டுப்புறத்தில் வசிக்கிறேன்”. நான், “அநேக வருடங்களாக உங்களைக் குறித்து நான் கேள்விப்படவில்லை”. “நீங்கள் சிறிது நீண்ட காலம் ஒரு சிறிய துப்பாக்கி போன்ற வீட்டில் அதே போன்ற இடத்தில் நீங்கள் வசிக்கவில்லையா?”, என்று கேட்டேன். அவர், “ஆமாம்”, என்று சொன்னார். மேலும் நான், “நீங்கள் இந்த சிறிய இதைப் போன்ற வாசல் வழியாக வந்து மேலும் அங்கேயுள்ள பாறைகளின்மேல் நடந்து அங்கேயுள்ள சில பெரிய காட்டத்தி மரங்கள்வரை சென்றீரே”‚ அவர், “ஆமாம்” என்றார். நான், “நீங்கள் சுவர்களின் மேலாக சிகப்பு நிற காகிதத்தை வைத்திருக்கிறீர்கள்”, என்றேன். அவர், “அது சரி” என்றார். மேலும், நீங்கள் உள்ளேபோகும் போது அந்த கதவினுடைய வலதுபக்கத்தில் உங்கள் சிறிய பையன் ஒரு சிறிய இரும்புக் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிறான். அவர், “நீங்கள் எப்பொழுதாவது அங்கே இருந்தீர்களா?” என்று கேட்டார். 81“ஆம், ஐயா‚” என்றேன். அவர், “நல்லது, எப்பொழுது நீங்கள் இருந்தீர்கள் பில்லி”, என்றார். “ஓஹையோவிலிருந்து வந்து இரண்டு வாரங்கள் மட்டுமே அங்கே ஜீவித்துக் கொண்டிருந்தேன்”, என்றார். ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு நான் அங்கிருந்தேன்“, என்றேன். அவர், “ஏன், பில்லி, நான் - நான் - நான் புரிந்துகொள்ள முடியவில்லை”, என்றார். நான், “உங்கள் சிறிய பையன் ஒரு ஜோடு நீலநிற பஞ்சு சீருடைகளை அணிந்திருந்தான் இல்லையா?”, என்றேன். அவர், “இப்பொழுது அவன் அதை தான் அணிந்து இருக்கிறான்”, என்றார். நான், “அது தான் நான் நினைத்துக் கொண்டிருந்தது” மேலும் நான்,“உங்கள் மனைவி ஒரு வகையான கருப்பு நிற தலையுடைய பெண்மணியாக, ஒல்லியாக இருப்பார்கள் அல்லவா?”, என்றேன். அவர், “ஆம்” என்றார். “நீங்கள் என்னுடைய வீட்டில் இருந்ததாக ஒரு மணிநேர... “ஆமாம்” திரு. எமில் அவர்களே நான் ஒரு மணி நேரத்திற்கு அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக தரிசனத்தில் இருந்தேன் அல்லது ஒரு வகையாக என்னை அங்கு இருக்கும்படியாக ஆவியில் எடுத்துச்சென்றது“ மேலும் நான், ”கர்த்தர் உங்கள் குழந்தையை சுகமாக்கப்போகிறார்“, என்றேன். மேலும் அவர் அந்த பழைய யு-மாடல் போர்ட் காரின் பிரேக்கை அழுத்தி, அவருடைய கார் ஓட்டும் சக்கரத்தில் மேல் விழுந்து மேலும் அவருடைய கைகளை உயர்த்தி கத்தி கூச்சலிட்டு, “தேவனே என்னிடத்தில் இரக்கமாயிரும், நான் உமக்கு ஊழியம் செய்வேன், தேவனே‚” என்றார். அங்கே நான் என்னுடைய கரங்களை அவர் மேல் போட்டு அவரை மறுபடியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் வழி நடத்தினேன். 82இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பாக நான் புளோரிடாவில் இருந்தேன். யாரோ ஒருவர், “பில்லி” என்று சப்தமிட்டதை நான் கேட்டேன். நான் சுற்றிலும் பார்த்தேன். நான் எப்பொழுதும் அவரைக் கூப்பிடுவதுண்டு... நாங்கள் ஒன்றாக சிறிது காலம் வேலை செய்தோம், நாங்கள் அவரை “ஐயா ஜான்” என்று கூப்பிடுவோம். மேலும் நான், “ஐயா ஜான்”, என்றேன். (ஒலிநாடாவில் வெற்றிடம்)...அங்கே தெருவின் ஓரத்தில் இருக்கிற தபால் அலுவலகத்தின் பக்கத்தில், நான் உள்ளே சென்றேன். இப்பொழுது அவர் அங்குதான் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே நாங்கள் அந்த வீட்டுக்குச் சென்றோம்... இப்பொழுது நான் அது எப்படி பரிபூரணமாக இருந்தது என்று உங்களுக்குக் காட்டப்போகிறேன். இப்பொழுது அந்த குழந்தை என் கரங்களில் கொடுக்கப்படுவதற்கு முன்பாக ஒரு காட்சியை அந்த தரிசனத்தில் நான் பார்த்தேன், அந்த சிறிய தாய் இந்தவிதமாக அந்த சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தாள். மேலும் ஒரு வயதான பெண்மணி... இப்பொழுது அங்கே ஒரு இரட்டை மடிப்பு சிவப்பு கோட் ஆடையுள்ளவர் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அந்த வாசலிலிருந்து அந்த வழியாக ஒரு வயதான பெண்மணி உள்ளே வந்தார்கள், மேலும் அவர்களுடைய கண்கண்ணாடியை துடைத்துக்கொண்டு, இந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். அங்கே அந்த பக்கத்தில் மேலும் பொன்னிற தலைமுடியுடைய ஒருபையன், வாலிபன் அங்கே இந்த இரட்டைமடிப்புள்ள தன் மேலாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவர்கள் ஜன்னலின் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 83அப்பொழுது, நான் உள்ளே நடந்து சென்றபோது... உண்மையில் அதைக் குறித்து அப்போது ஒன்றும் அறியாதவனாய், எப்படி அதை எடுத்துக்கொள்வது என்றும் அல்லது அது என்ன என்றும் உண்மையில் அது என்னவாய் இருந்தது என்றும் எனக்குத் தெரியாது. மேலும் அதனால் நான் உள்ளே நடந்துச் சென்றேன். மேலும் நான் உள்ளே சென்றபோது, அங்கே அந்த சிறிய பையன் அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும் அவனுடைய அம்மா அவனுடைய மூக்கின் மேலாக ஒன்றை வைத்துக்கொண்டு மேலும் அழுது கொண்டும் அப்படியாய் காரியம் சென்று கொண்டிருந்தது. அவன் இப்பொழுது ஜீவிப்பதே கடினமாக இருந்தது. நான் தரிசனம் என்னவாக இருந்தது என்று பார்த்தேன். நிமோனியா அவனை வெளியேற்றும்படி எல்லாவற்றையும் அடைத்தது. ஆனால் இங்கே அவன் மிகச்சிறிய சின்ன பையன் மரித்துக் கொண்டிருந்தான். (சகோதரன் பிரான்ஹாம் ஊசலாடுகிற சத்தத்தை செய்கிறார்) மேலும் நான் அந்த சிறிய பழுப்பு நிற தலைமுடியைப் பார்த்தேன்... ஒரு பையனை மேலும் நான் “திருவாளர் எமில், அவனை இங்கே கொண்டு வாருங்கள், நீங்கள் தேவனுடைய மகிமையைப் பார்க்கப்போகிறீர்கள்”, என்றேன். 84ஆகவே, அந்த சின்னப் பையன்... அந்த மனிதனோ அந்த சின்ன பையனை தன்னுடைய கரங்களில் எடுத்துக்கொண்டு உணர்ச்சி மேலிட்டு, மேலும் என்னிடத்தில் ஓடி வந்தார்... நான் அங்கே எப்படிச் செயல்பட்டேன் என்று கவனியுங்கள். பாருங்கள், நான் அந்த அருளப்பட்ட அணுகுமுறையில் வரவில்லை. பாருங்கள். நான், “அவனை இங்கே கொண்டு வாருங்கள்” என்றேன். மேலும் நான் ஆயத்தமானேன். ஏனெனில் அந்த தரிசனத்தில், அவனை சுகமாக்கப்போகிறது என்பதைப் பார்த்தேன். ஆனால் நீங்கள் தேவனுடைய அணுகுமுறைக்கு வந்தாக வேண்டும் பாருங்கள், மேலும் அவர்கள் அவனை அங்கே கொண்டுவந்தார்கள். இப்பொழுது நான் அவன் மேலாக என்னுடைய கரங்களை வைத்தேன். நான் சொன்னேன், “தேவனே, இந்த சிறியவனை சுகமாக்குவீராக என்று ஜெபிக்கிறேன்”, நீர் அதை செய்வதாகச் சொன்னீர்“ அந்த சிறிய பையன் மூன்று அல்லது நான்கு முறை ஊசலிட்டு மேலும் முழுவதுமாக கடந்துசென்றுவிட்டான். நான் அவனைப் பார்த்தேன். அவனுடைய தாயார் கூச்சலிட ஆரம்பித்தார்கள். “ஓ, அவன் மரித்துவிட்டான், அவன் மரித்துவிட்டான், அவன் மரித்துவிட்டான்” மேலும், நல்லது என்ன நடந்தது? என்று நான் நினைத்தேன், ஓ, நான் நினைத்தேன், என்னே, அங்கே இவ்வாறு அது இருந்தது. ஓ, இங்கே கிரஹாம் ஸ்நெல்லிங் நின்றுகொண்டிருந்தார். அந்த பொன்னிற தலைமுடியுடன் இருக்கிற அவன் சுருள் முடியுடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அங்கே ஒரு வயதான பெண்மணி இந்த நாற்காலியிலே இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டு இருந்திருக்க வேண்டும், அங்கே மர இருக்கைகள், மேலும் ஒவ்வொன்றும் இருக்க வேண்டும். ஆனால் அது சரியாக இருக்கவில்லை. நான் சரியாக அணுகுமுறையுடன் வரவில்லை. 85மேலும் அந்த பெண்மணி அங்கே அவளுடைய கணவருடன் நின்றுகொண்டு இருக்கக் கூடாது. அவள் அந்த கதவின் மேலாக சாய்ந்து கொண்டிருக்க வேண்டும். ஓ, தேவனே, நான் அந்த குழந்தையை கொன்றுவிட்டேன் என்று நான் நினைத்தேன். ஓ, என்னே, மேலும் அந்த குழந்தையை தகப்பனார் கீழே வைத்தார். அவள் கத்திக்கொண்டும் கதறிக் கொண்டும் மேலும் பல காரியங்களை செய்யத் தொடங்கினாள். இப்பொழுது நான் அங்கே நின்று கொண்டிருந்தேன். “ஓ, என்னே, நான் என்ன செய்துவிட்டேன்? என்று நான் நினைத்தேன். நான் என்ன செய்துவிட்டேன்?மேலும் நான் சிறிது நேரம் இப்பொழுது காத்துக்கொண்டிருந்தேன். மேலும் அந்த குழந்தை... ஓ, இப்பொழுது சொற்ப உயிருடன் ஜீவித்துக்கொண்டிருந்தது, இப்பொழுது மிகவும் மோசமான நிலையைக் கொண்டிருந்தது. மேலும், ஓ, நான் அந்த குழந்தையை கொன்றிருப்பேன் என்றால், ஓ... நான் அதை கொல்லவில்லை, ஆனால் அதற்குக் காரணமாகியிருக்கலாம் என்று நான் நினைத்தேன். நான் அவர் என்னை என்ன செய்ய சொன்னாரோ அதற்கு கீழ்படிந்து இருப்பேன் என்றால், ஆனால் நான் அதைவிட்டுவிட்டேன்... அது உண்மை இங்கே அந்த வேதாகமத்திற்கு முன்பாக, மக்களே, பரலோகத்திலுள்ள தேவன் அது உண்மையென்று அறிவார். 86நல்லது இப்பொழுது... என்று நான் நினைத்தேன். நான் நடந்துசென்று மேலும் அங்கே உட்கார்ந்துவிட்டேன். மேலும் பகல் வெளிச்சம் வந்தது, அங்கே ஒரு மணிநேரம் அங்கேயே உட்கார்ந்துவிட்டேன். அந்த பகல் வெளிச்சம் வந்தது. “நல்லது நான் வேலைக்கு சென்றாக வேண்டும்” என்று திருவாளர் ஸ்நெல்லிங் சொன்னார். “நான்...”, என்று அவர் சொன்னார். ஓ, என்னே, அவர்கள் அவனை எடுத்துவிட்டால், என்று நான் நினைத்தேன். அந்த பொன்னிற தலைமுடியுள்ள மனிதன் அங்கே இரட்டைமடிப்பு ஆடையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான்... அது அப்படி நடந்து இருந்தது என்றால், அந்த முழு தரிசனமும் பாழாகி இருக்கும். மேலும் நான் முழுசாட்சியையும் பாழாக்கி விட்டிருப்பேன். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஓ, என்னுடைய இருதயத்தில் இப்பொழுது ஒருவிதமான இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றைச் சொன்னார்கள், அதற்கு பதில் சொல்ல என்னால் முடியவில்லை. நான் அங்கே வெறுமனே உட்கார்ந்திருந்தேன். என்னால் அவர்களுக்கு சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஒருவேளை தேவன் ஏதோ ஒரு வழியில் திருத்தி அதை சரியாக்கி, மேலும் அந்த காட்சியை மறுபடியும் நிலைநிறுத்துவார் என்று நான் நினைத்தேன். அதனால் நான் அங்கேயே வெறுமனே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். மேலும், “சகோதரன் பிரான்ஹாம் அந்த குழந்தைக்கு மீண்டும் நீங்கள் ஜெபிக்க விரும்புகிறீர்களா?”, என்று அவர்கள் கேட்டார்கள். “நன்றி”, என்று நான் சொன்னேன். ஓ, எங்கே அந்த வயதான பெண்மணி, மேலும் ஓ, மேலும் கிரஹாம் சென்று அவருடைய கோட்டைபோட வேண்டுமே‚ என்று நான் நினைத்தேன். ஜான் கேட்டார், “சகோதரன் பிரான்ஹாம் நீங்கள் மறுபடியும் எங்களுடன் ஜெபர்சன்வில்லுக்கு திரும்பிப் போக விரும்புகிறீர்களா?” “இல்லை, நன்றி”, என்று நான் சொன்னேன். நான் அங்கேயே தங்கியாக வேண்டும். நான் நினைத்தேன், இரவுக்கு முன்பாக இருக்கும்... மேலும் அந்த குழந்தையால் முடியவில்லை என்றால்... என்னால் அந்த இன்னுமொரு ஒரு மணிநேரம் எப்படி அதனால் ஜீவிக்க முடியும் என்று பார்க்க முடியவில்லை. மேலும் அந்த நிலைமையில் அது இருந்தது. அந்த இடத்தில் பகல் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. மேலும் வழக்கமாக உங்களுக்கு தெரிந்திருக்கும் சுகவீனமான மக்கள் எப்படி... சரியாக விடியும் வேளையிலே அதனால், “ஓ” இது இப்படியாய் இருக்கிறது, நான் என்ன செய்தேன் என்று நான் நினைத்தேன். 87மேலும் முதல் காரியம்... திருவாளர் ஸ்நெல்லிங் அவருடைய கோட்டை அணிந்து கொண்டு வெளியே செல்லத்து வங்கினார். மேலும் திருவாளர் எமில் அவருடைய மனைவியினிடத்தில், “நல்லது போய் வருகிறேன் தேனே”, என்று சொன்னார். “நான் திரும்பி வந்து உடனேயே நான் கீழே கிரஹாமை கூட்டிக்கொண்டு கீழே செல்ல வேண்டும் அதனால் அவர் வேலைக்குப்போக முடியும் என்று சொன்னார். மேலும் அங்கே அந்த ஒரு தொழிற்சாலைகளில் ஒன்றில் வேலை செய்கிறார் என்று சொன்னார். “நான் ஒரு சிறிது நேரம் கழித்து திரும்பி வருவேன், மேலும் நான் இந்த காலை வேளையில் நான் வேலைக்குச் செல்லவில்லை” என்று சொன்னார். “சரி அன்பே” என்று அவள் சொன்னாள். மேலும் நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன், நான் நினைத்தேன், ஓ, மேலும் நான் ஜன்னலின் வெளியே பார்த்துக்கொண்டிருந்தபோது மேலும் இங்கே ஒரு சின்ன தோள்பட்டை புத்தக பையை கைகளில் வைத்துக்கொண்டு, மூக்கு கண்ணாடியை அணிந்துகொண்டு, நரைத்த முடியுடன் கூடிய அந்த குழந்தையின் பாட்டி வந்து கொண்டிருந்தார்கள். சுற்றிலும் நடந்துகொண்டு பின்பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஒவ்வொரு நேரமும் அவர்கள் இதற்கு முன்பாக எப்பொழுதும் முன்பக்க கதவு வழியாக வருவார்கள் என்று சாட்சி சொல்லியிருந்தார்கள். ஆனால் அவர்கள் பின்பக்கமாகச் சென்று உள்ளே வர சின்ன சமையல் அறைக்குச் சென்றுவிட்டார்கள். 88மேலும், “ஒ” அது அவர்கள் தான், அந்த பெண்மணி தான். அவர்கள் அந்த குழந்தையின் பாட்டி என்று நான் அறியாமல் இருந்தேன் என்று நான் நினைத்தேன், ஆனால் அந்த பெண்மணிதான் அந்த தரிசனத்தில் இருந்தார்கள் என்று அறிந்து கொண்டேன். மேலும் அதனால், இங்கே அவர்கள் சரியாக நடந்துவந்து கொண்டிருந்தார்கள்... மேலும் நான் நினைத்தேன் இங்கே இதுதான் அது, இங்கே இதுதான்அது, கர்த்தருடைய கிருபையானது அதை சீர்தூக்கி நிறுத்தப்போகிறது என்று நான் என்னுடைய இருதயத்தில் நினைத்தேன். உங்களுக்குத் தெரியும், எதையும் நான் சொல்லவில்லை. அந்த வயதான பெண்மணியை கவனித்துக் கொண்டிருந்தேன். மேலும் அவர்கள் சுற்றி வந்து பின்பக்க கதவு வழியாக சென்றார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது, “யார் அது” என்று நான் கேட்டேன். மேலும் சகோதரன் கிரஹாம் அந்த கதவண்டையில் நின்று கொண்டிருந்தார், அவரும் திருவாளர் எமிலும் வெளியே செல்ல இருந்தார்கள். 89அதனால் தாயார் சென்று சமையல் அறையின் கதவை திறந்து சமையல் அறையினுள் பார்த்தார்கள். மேலும் அந்த குழந்தையின் தாயார் அந்த வாலிபப் பெண்மணி அங்கே வெளியே பார்த்தார்கள். “ஓ, அது தாயார் என்று சொன்னார்கள். மேலும் ஜான் மற்றும் கிரஹாம் இப்பொழுது திரும்பிப் பார்த்தார்கள். மேலும் அவர்கள் அதை செய்த போது, நான் எங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேனோ அங்கிருந்து எழுந்தேன், ஏனென்றால் கிரஹாம் அங்கே ஒருவேளை உட்கார்ந்திருக்கலாம். அதனால் நான் எழுந்திருந்து திரும்பிப் பார்த்தேன். மேலும் தாயார் வந்து அந்த குழந்தையின் பெயரைக் கூப்பிட்டார்கள். “அந்த குழந்தை இன்னும் உயிருடன் இருக்கிறதா? அது நன்றாக இருக்கிறதா?” என்று அவர்கள் கேட்டார்கள். 90மேலும் அந்த மனைவி, “இல்லை அது இப்பொழுது மரிக்கும் தருவாயில் இருக்கிறது அம்மா”, என்று சொன்னார்கள். மேலும் அவள் அந்த சுவற்றின் மேலாக கைகளைப் போட்டு அழத்தொடங்கினாள், அந்த விதமாக உங்களுக்கும் தெரியும், இப்பொழுது கதவை இந்த மாதிரி தட்டிக்கொண்டு கூச்சலிட்டு, அவருடைய தாயாருக்கு முத்தம் கொடுத்தாள். மேலும் அந்த வயதான பெண்மணி... நீங்கள் எங்கு போகிறீர்கள்? என்று நான் நினைத்தேன். அவளைக் கவனித்தேன். மேலும் அவள் அங்கே சென்று அந்த நாற்காலியிலே உட்கார்ந்து கொண்டாள். மேலும் அந்த மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டாள், ஏனென்றால், வெளியே குளிரான சீதோஷன நிலையிருந்து வந்து இருந்ததால், அது வெளிபக்கம் உறைந்து போயிருந்தது. மேலும் அவருடைய கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அது சரியாக இருந்தது‚ என்று நான் நினைத்தேன். “சகோதரன் கிரஹாம் அங்கே சென்று உட்காருவார் என்றால்”, என்று நான் நினைத்தேன். அந்த வாலிபப் பெண் அழுதுகொண்டிருந்தாலும் சகோதரன் கிரஹாம் அவர்களுக்கு உறவினராக இருந்ததாலும் அழத் தொடங்கினார். மேலும் சென்று அதே இடத்தில் உட்கார்ந்தாள். ஓ, என்னே‚ 91இப்பொழுது அது சரியாக இருந்தது. நான் அங்கே நின்று, “திருவாளர் எமில் நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?” என்று கேட்டேன். “ஏன்” என்று அவர் கேட்டார். நான், “நீங்கள் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம் பில்லி, ஏன்”, என்று கேட்டார். “கொஞ்ச நேரத்திற்கு முன்பாக நான் தருணம் வருவதற்கு முன்பாக பேசினேன்” என்று நான் சொன்னேன். நான் சொன்னேன் என்னை மன்னியுங்கள். மேலும் நான் கர்த்தரிடத்தில் மனம் திரும்பினேன். இந்த இரண்டு மணி நேரத்திற்கு அல்லது அதற்கு அதிகமாக எந்த ஒரு காரியத்தையும் நான் சொல்லவில்லை. (சகோதரன் கிரஹாம் எழுந்துவிட்டார்)... “என்ன எனக்கு வெளிப்படுத்துகிறீர்”. “நல்லது என்ன? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று அவர் கேட்டார். நான், “எல்லா காரியமும் இப்பொழுது ஒழுங்கில் இருக்கிறது. நீங்கள் இன்னுமாய் என்னை விசுவாசிப்பீர்கள் என்றால், அந்த குழந்தையை இங்கே இப்பொழுது கொண்டு வாருங்கள்”, என்றேன். மேலும் அந்த தகப்பனார் குழந்தையைத் தூக்கி கொண்டு அங்கே நடந்து வந்தார்.பரலோகப் பிதாவே என்னுடைய முட்டாள் தனத்திற்காகவும், என்னுடைய தவறுக்காகவும் என்னை மன்னியுங்கள். இப்பொழுது நீங்கள் என்ன செய்ய இருந்தீரோ அதை நிறைவேற்றுவீராக“ என்று சொன்னேன். என்னுடைய கரங்களை அந்த குழந்தையின் மேலாக வைத்தேன். அது அதினுடைய கரங்களை தன் தந்தையுடைய கழுத்தை சுற்றிலும் வளைந்து மேலும் “அப்பா, அப்பா, அப்பா என்று சொன்னது”, 92மேலும் ஒவ்வொருவரும் கத்தி கூச்சலிடத் துவங்கினார்கள். அங்கே மலைபகுதியின் மேல் இரட்சண்ய சேனையை உடையவர்கள் இருந்தார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அதன் பிறகு அந்த சிறு குழந்தையானது...ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, “இப்பொழுது நாம் போகலாம்”, என்று நான் சொன்னேன். “சகோதரன் பில் என்னுடைய குழந்தை நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டார், நான் சொன்னேன். எனக்கு காண்பித்தவிதமாகவே அந்த குழந்தை அந்த மூலையிலிருந்து வந்தது, மேலும் அது மூன்று முறைமுறுக்கி இருந்தது. ஒன்று இந்த காலில், இந்த வழியாக, மேலும் ஒன்று இந்த காலில் பின்பக்கமாக இந்த வழியாக, அதன்பிறகு அதினுடைய சரீரம் முறுக்கிவிடப்பட்டதிலிருந்து விடுபட்டது. மூன்றுபடிகள் அதின் அர்த்தம் என்னவெனில் மூன்று நாட்கள். “எனக்கு சொல்லப்பட்ட விதமாகவே மூன்று நாட்களில் இந்த குழந்தையானது சரியான நிலைக்கு வந்துவிடும். மேலும் நலமாக இருக்கும்” என்று நான் சொன்னேன். 93அதனால் அவர்கள் அந்த குழந்தையை கட்டிலின்மேல் படுக்கவைத்தார்கள், மேலும் அது அதினுடைய தகப்பனார் இடத்தில் பேசிக்கொண்டிருந்து, இதற்கு முன்பாக சரியாக மூச்சுவிடக் கூடமுடியாமல் கடினப்பட்டது, நாங்கள் சென்று காரிலே ஏறி வீட்டுக்குச் சென்றோம் நான் அதை புதன்கிழமை இரவு சபைக்குச் சொன்னேன், மேலும் நான் கேட்டேன், “எத்தனை பேர் நாளை அல்லது நாளை இரவு, அந்த சின்ன குழந்தையைப் பார்க்க விரும்புகிறீர்கள்... மேலும் கவனியுங்கள் நான் அந்த கதவண்டையில் செல்லும் போது (அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது; இப்பொழுது அந்த வீட்டினுள்) நான் சொன்னேன், ''பாருங்கள் அந்த சின்ன குழந்தை என்னிடத்தில் வரவில்லை என்னால் மேலும் அதினுடையகரங்களை என்னிடத்தில்போட்டு மேலும் ”சகோதரன் பில் நான் முழுவதும் சுகமானேன் என்று சொல்லி மேலும் அதினுடைய வாயில் பாலை வைத்து கொண்டிருக்கும் என்று நான் சொன்னேன். “பாருங்கள் அது அப்படி செய்யவில்லை என்றால்” பாருங்கள்? மேலும் ஒரு, ஒரு வண்டி முழுவதுமான சுமையோடு சென்றிருக்கும். 94மேலும் அவர்கள் அந்த ஜன்னல்களைச் சுற்றிலும் ஒன்று சேர்ந்து இருந்தார்கள். மேலும் நான் வண்டியிலிருந்து வெளியே வந்து, சென்று கதவை தட்டினேன். இப்பொழுது ஏழையான மக்கள், தரைவிரிப்பு கூட தரையில் இல்லை, ஒரு (தெளிவற்ற வார்த்தை) அங்கே காட்சி வரத் துவங்கியது. மேலும் பிள்ளைகள்... அந்த பிள்ளை இன்னொரு சின்ன குழந்தையுடன் அந்த தரையில் விளையாடிக்கொண்டிருந்தது, அந்த குழந்தையைப் பார்ப்பதற்காக பக்கத்து வீட்டிலிருந்து வந்திருந்த ஒரு சிறுமி அது. மேலும் நான் கதவை தட்டினபோது, மேடா அது இப்பொழுது என்னுடைய மனைவி... நாங்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவள் என்னுடைய பக்கத்தில் நெருங்கி நின்று கொண்டிருந்தாள். மூன்று அல்லது நான்கு நபர்களுடன். மேலும் திருமதி எமில், “ஓ அது சகோதரன் பிரான்ஹாம், உள்ளே வாருங்கள் சகோதரன் பில், நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன்”, என்று அவள் சொன்னாள். 95இந்தவிதமாக நான் அவர்களை நோக்கிப் பார்த்தேன். நாங்கள்அந்த அறைக்குள் சென்றோம். மேலும் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தபோது, அந்த சின்ன பையன் சில சதுரமான பொருட்களுடன் அங்கே மூலையில் விளையாடிக் கொண்டிருந்தான். எழுந்திருந்து, மேலும் என்னை நோக்கிப் பார்த்தான். பாலைக் குடித்து கொண்டிருந்ததால் அவனுடைய வாய்க்கு குறுக்காக மேலே சின்ன மீசையைக் கொண்டிருந்தான். நடந்து வந்து மேலும் என்னுடைய ஒருகரத்தைப் பிடித்துக் கொண்டான். மேலும், “சகோதரன் பிரான்ஹாம் நான் இப்பொழுது முழுவதும் சுகமாகிவிட்டேன்” என்று சொன்னான். அது என்னவாக இருந்தது?மூன்று நாட்கள், எல்ஷடாய் மூலம் பாலூட்டப்படுதல், தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தம்; தேவனுடைய தெய்வீக அணுகுமுறைக்கு வருதல்; அவர் ஒரு அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்.அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் ஜெபிப்போமா, பரலோக பிதாவே, நாங்கள் இன்று உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ, எங்களுடைய இருதயம் எப்படியாய் கொழுந்து விட்டு எரிகிறது, ஏனென்றால் நாங்கள் இன்னுமாய் அந்த தெய்வீக அணுகுமுறையை உடையவர்களாக இருக்கிறோம். வேதத்தில் உள்ள ஒவ்வொரு விவரங்களையும், எங்களிடத்தில் ஒளிமயமான ஆதாரங்களுடன் பெற்றிருக்கிறோம், இப்பொழுது இங்கேயே நமக்கு தேவையான எல்லா காரியங்களையும் கொடுப்பதற்கு எல்லாவற்றிற்கும் போதுமான தேவனை நாம் பெற்றிருக்கிறோம். மேலும் தேவனே இன்றைக்கு மேம்பட்ட தியாகபலியின் மூலமாக நான் உம்மிடத்தில் அணுகுகிறேன், நியாயப்பிரமாணம் நல்ல காரியங்கள் வருவதற்கு ஒரு நிழலாய் இருந்ததுபோல... வருகிறவரைப் பூரணமாக்க முடியாத அந்த மெய்யான சாயலைக் கொண்டிராத தகனபலியுடன் - நிழலான காரியத்தின் ஊடாக யோபு வந்ததுபோல அல்லாமல்; ஆனால் இந்த மனிதன், கிறிஸ்து எல்லோருக்காகவும் ஒரேமுறை மரித்து மேலும் என்றென்றைக்கும் அதை நிலைவரப்படுத்தினபடியால், தேவனுடைய ஒரே ஒரு அணுகுமுறை அவருக்கானது, அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக; இரத்தம் சிந்துதலின் மூலமாக; பரிசுத்த ஆவியின் கவர்ந்திழுத்தலின் மூலமாக; நான் இன்றைக்குக் கேட்கிறேன், அந்த சாலை, இந்த காலை தெய்வீக பிரசன்னத்தில் ஒவ்வொரு நபருக்கும் திறந்து இருப்பதாக இதை அருளும் கர்த்தாவே. இரவு வந்து கொண்டிருக்கிறது, தெய்வீக சுகமளித்தல் ஆராதனை வந்து கொண்டிருக்கிறது. 96பிதாவே இப்பொழுது யாராவது ஒருவர் ஏறுமாறாக, பொறுப்பில்லாமல், உம்மை அறியாமல், எப்படி உம்மிடத்தில் வருவது என்று தெரியாமல் இங்கே இருப்பார் என்றால்; ஒரு வேளை அவர்கள் இப்பொழுது மறுபடியும் பிறத்தலைப் பெறாமல் வெளியே விலகிச் சென்று ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்துவிட்டு, உம்மை அணுகாமலிருந்துவிட்டு வெளியில் உம்மை அணுக முயற்சித்துக் கொண்டிருப்பார்களானால் இப்பொழுதே கிறிஸ்துவின் மூலம் அவர் உள்ளே வருவார்களாக. எல்ஷடாயின் மார்பகத்திடம் வருவார்களாக; அவரே நம்முடைய மீறுதல்களுக்காகக் காயப்பட்டவர். அதன் பிறகு இன்று இரவு திரும்பி வரும்போது அவர்களுடைய தலையை தாயின், தேவனின் மார்பின் மேலாக வைப்பார்களாக. அவர் ஒருவர் மாத்திரம் தான் நமக்கு சரியான பிறப்பை அளிக்க கூடியவர், தேவன், நமது தாயும் தகப்பனுமானவர். நம்முடைய மீட்பர், நம்முடைய நேசமானவர். ஓ, எல்லாவற்றுக்கெல்லாமுமாய் இருக்கிறவராகிய தேவனே‚ இப்பொழுதே இதை அருளும். இங்கே இனிமையுடன், இசை இசைத்துக் கொண்டிருக்கும் வேளையிலே ஒவ்வொரு ஏறுமாறான ஆத்துமாவும் இப்பொழுது இங்கே தேவனுடைய பரதீசின், வாசலண்டைக்கு வருவார்களாக. மேலும் 'தேவனே பாவியான என்னிடத்தில் இப்பொழுது இரக்கமாயிரும், அல்லது ஒரு பின்மாறிப்போன' அருளப்பட்ட தேவனுடைய வழியில் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வரும்படியாக என்னை ஏற்றுக்கொள்ளும் பிதாவே'' என்று சொல்லுவார்களாக. 97நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கும் இந்த வேளையில், நான் வியக்கிறேன்; அங்கே ஒருவர், இருவர் எத்தனைபேர், இந்த கட்டிடத்தில் எங்கேயாவது இருப்பீர்கள் என்றால், உங்கள் கரங்களை உயர்த்தி மேலும் சொல்லுங்கள், சகோதரன் பிரான்ஹாமே, நான் சிறிது ஒரு காலம் கடத்துகிறவனாய் இருந்தேன். ஒரு வகையான இங்கும் அங்கும் சுற்றித்திரிகிறவனாய், அல்லது ஒருவேளை நான் ஒரு உணர்ச்சி வசப்பட்டவனாய், வெளிச்சங்களை பார்க்கிறவனாய் ஏதோ ஒருவிதமான அனுபவத்தினூடாக ஒரு வகையான நம்பிக்கையுடன் தேவனிடத்தில் வரும்படியாய் இருந்தேன் அல்லது... ஆனால் இப்பொழுது இங்கே நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டேன். நான் தேவனுடைய வழியிலே வருகிறேன், இப்பொழுதே நான் சிலுவையின் வழியிலே வருகிறேன். இங்கே நான் என்னுடைய கரத்தை சர்வ வல்லமை படைத்த தேவனிடத்தில் உயர்த்துகிறேன். 'தேவனே என்னிடத்தில் கிருபையாயிரும்'' என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, உங்களை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஜெபித்துக் கொண்டேயிருங்கள். எங்கே இருந்தாலும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை ஓ, என்னே‚ பால்கனியின் மேலே, அங்கு எங்கேயோ மேலே, யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் இப்பொழுது இங்கே விசுவாசத்தினால் நான் கதவண்டை வரைக்கும் நகர்ந்து வந்தேன். நான் அதைப் பார்க்கிறேன். என்னுடைய வழியில் அதைச் செய்யவில்லை என்று பார்க்கிறேன். என்னுடைய சொந்த யோசனைகள் நன்றாக இல்லை. தெய்வீக சுகமளித்தலை குறித்து என்னுடைய நினைவுகள் சரியாக இல்லை. ஒரு இரும்பு சுவற்றுக்கு எதிராக அடிக்க நான் முயற்சி செய்கிறேன். நான் அதிகமாக வர நான் அதிகமாக அடிக்க நான் மிக மோசமானதையே பெற்றுக்கொள்கிறேன். என்னால் வேறே எங்கேயும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சகோதரன் பிரான்ஹாமே அதனால் இப்பொழுது இங்கே நீர் என்ன சொன்னீரோ அதை நான் ஏற்றுக்கொள்ளப் போகிறேன். நான் தேவனுடைய அருளப்பட்ட வழியிலே வருகிறேன். நான் இப்பொழுது எளிமையாக வருகிறேன். என்னை சுற்றியுள்ள எல்லாவற்றுக்கும் உணர்வற்றவனாக கர்த்தராகிய இயேசுவிடம் வருகிறேன். இப்பொழுதே சிலுவையின் வழியாக வருகிறேன்.” அவர் வல்லமையுள்ள ஒருவர் என்றும் எல்ஷடாய் என்றும் ஏற்றுக்கொள்கிறேன், என்று சொல்லுவார்களானால்‚ தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தகப்பனே, வயதான நரைத்த முடியுடன் அந்த மனிதர் கைகளை மேலே தூக்கியபடி, நடுக்கமுற்று, நினைவு கூரப்பட வேண்டும் என்று விருப்பமுடையவராய் உள்ளார். நாம் ஜெபிப்போமா. 98கர்த்தராகிய இயேசுவே, அவர்களை நோக்கிப் பாரும். ஒரு பன்னிரண்டு அல்லது அதற்கு அதிகமான கரங்கள் ஒருவேளை இரண்டு டஜன் பேர் சுற்றிலும் அவர்களுடைய கைகளை உயர்த்தி இருக்கிறார்கள். ஒரு சில வயதானவர்கள், அலைந்துதிரிகிற அந்த பரிதாபமான சகோதரர்கள், ஒருவேளை சபையில் சேர்ந்து கொண்டு இருக்கலாம், அல்லது நல்லது செய்வதற்கு முயற்சி செய்து இருக்கலாம். அது எல்லாம் நல்லதுதான். பிதாவே, அவர்கள் சபைக்கு சென்றதை நீர் பார்த்தீர். மேலும் அவர்களுடைய பெயர்களை சபையிலே பதிவு செய்தார்கள். அதை நீர் பார்த்தீர், பிதாவே அவர்கள் மக்களுக்கு அந்த நல்ல செயல்களை செய்தபோதும், அவர்களுடைய பொருட்களை கொடுத்தார்கள், விதவைகளை போஷித்தார்கள் அந்த ஒன்றும் இல்லாத ஏழையான வயதான பெண்மணிக்கு நிலக்கரி இழுத்துக் கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக மரத்தை வெட்டிக் கொடுத்தும், சாலையின் ஓரத்தின் பக்கத்தில் அந்த மனிதருக்கு உதவி செய்தபோதும், பூங்கா மீட்டரில் காசு போட்டு அவர்களுடைய சகோதரர்களுக்கு அந்த போலீஸ்காரர் ஒரு அடையாள சீட்டை கொடுக்கவைத்ததையும், ஒருவேளை ஒரு மனிதனை அவர்கள் முன்னே பார்த்திராதிருந்தும், ஆனால் அவர்கள் இப்பொழுது கடந்து போகும்போது மேலும் அவருக்காக மனம் வருந்தியிருப்பார்கள். அது நல்லது தான். அதை நீர் பார்த்தீர் கர்த்தாவே, அதற்காக அவர்களை நீர் நேசித்தீர். மேலும் இப்பொழுது அவர்களுடைய இருதயத்தில் பேசும், மேலும் அவர்கள் இப்பொழுது அருளப்பட்ட வழியிலே வர விரும்புகிறார்கள், அவர்கள் என்ன செய்தார்களோ அதற்காக இல்லை, ஆனால் உமக்கு அவர்கள் தங்கள் சொந்த சித்தத்தை சரணாகதியாய் ஒப்புக்கொடுக்கும்படியாய் மேலும் உம்மை அவர்களுடைய இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்படியாய் வர விரும்புகிறார்கள். இப்பொழுது இங்கே அவர்களை ஏற்றுக் கொள்ளும். பிதாவே, இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 99மேலும் ஜெபத்திலே உங்களால் முடியும் என்றால், நம்முடைய தலைகளைத் தாழ்த்தியபடியிருக்கையில், நான் நழுவி சென்று ஜெபிக்கிற வேளையிலே அவர் வந்து பீட அழைப்பை முடித்துகொடுக்கும்படி நான் சகோதரர் ஜோசப் அவர்களைக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். தெய்வீக சுகமளித்தல் ஆராதனைக்காகவும் தயாராகுவேன். நான் கரங்களை உயர்த்தின ஒவ்வொரு நபரும் இங்கே வந்து மேலும் தனிப்பட்ட விதத்தில் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் ஜெபிக்க விரும்புகிறேன். இசை இசைத்துகொண்டிருக்கிறதான இந்த வேளையிலே நீங்கள் ஜெபத்தில் இருங்கள். நான் உங்களை இன்றிரவு பார்க்கும் வரை கர்த்தர் உங்களோடு இருப்பாராக.